இந்தோனேஷியா கரன்சி நோட்டில்  பிள்ளையார் படம் இருக்கிறதா?

இந்தோனேஷியா கரன்சி நோட்டில்  பிள்ளையார் படம்  இருக்கிறதா?

 

 

இந்து கடவுள்களான விநாயகர் - லட்சுமியின் படங்களை இந்திய நாணயத்தில் அச்சிடுமாறு அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள வேண்டுகோள், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸை திகைக்க வைத்துள்ளது.

இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள், இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே இந்துக்கள் என்று இருக்கும்போதும், பிள்ளையாரின் படம் அந்த நாட்டின் நாணயத்தில் உள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கூறியுள்ளார். 

இந்த வேண்டுகோளை விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், “உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவால் இதைச் செய்ய முடியும் என்றால், இந்தியா ஏன் செய்யக்கூடாது” என்ற  கேள்வியை எழுப்பியிருந்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால் இந்தப் பிரச்னையை எழுப்பியவுடன்  இந்த விவகாரம் டிவி சேனல்கள் முதல் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் வரை பரவியது.  இந்துத்துவா அபிமானிகள் இதை வரவேற்று இணையத்தில் பல யோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.  இது குஜராத் தேர்தலுக்காக  கெஜ்ரிவால் தங்கள் கட்சியும் இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் தேர்தல் ஸ்ட்ண்ட் என்றும் விமர்சிக்கபட்டது.

 விஷயத்தை ஆராய்ந்ததில் 2018 ஆம் ஆண்டே அந்த 20000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதும், வேறு  நோட்டுகளிலும்  இந்துக் கடவுளர் படம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com