மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா?

மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா?

மிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இதற்கு மஞ்சுவிரட்டு'; 'ஏறுதழுவுதல்' என்ற பெயர்களும் உண்டு. மஞ்சுவிரட்டில் உள்ள சில வகைகளை இங்கே பார்ப்போம்.

வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு, வீர விளையாட்டு. இது மக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். 'வாடிவா 'சல்' எனும் வாசல் வழியாக காளை திறந்துவிடப்படும். அப்போது சீறிக் கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து, குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும். அப்படிச்சென்றால் அந்த வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால், காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதிமுறை. இந்த மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

வேலி மஞ்சுவிரட்டு

திறந்தவெளியில் காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள். அது எந்த திசையை நோக்கி வேண்டு மானாலும் ஓட்டம் பிடிக்கும். வீரர்கள் அதை அடக்க வேண்டும். இந்த மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் பிரபலமானதாகும்.

 வடம் மஞ்சுவிரட்டு

டம் என்பது தமிழில் 'கயிறு' என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்து க்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 வீரர்கள் கொண்ட அணி, அந்த காளையை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது விதி.

குயிலாப்பாளையம் மஞ்சு விரட்டு

புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ள சர்வதேச நகரான ஆரோவில் செல்லும் வழியில் குயிலாப்பாளையம் கிராமத்தில், காணும் பொங்கல் தினத்தன்று எல்லை பிடாரி அம்மன் கோவில் மந்தைவெளி திடலில் நடத்தப்படும் போட்டி இது. இதில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள், கன்றுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்து மாடுகளின் கொம்புகளுக்கு இடையே தேங்காய், வாழைப்பழம், கரும்பு உள்ளிட்டவற்றை கட்டிவிடுவர். வண்ண வண்ண பலூன்கள், அரசியல் கட்சி தலைவர்கள். நடிகர் மற்றும் நடிகைகளின் படங்களையும் கொம்புகளுக்கு இடையே பொருத்தி மாடுகளின் உரிமையாளர்கள் அழைத்து வருவர். சீறிப்பாயும் மாடுகளை இளை ஞர்கள் சிறுவர்கள் உற்சாகமாக விரட்டி செல்வர்.

ஒவ்வொரு ஆண்டும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்கும். இதையொட்டி குயிலாப்பாளையத்தில் காலை முதல் இரவு வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளும் நடத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com