சந்தைக்கு வருகிறார் ஷர்லக் ஹோம்ஸ்!

சந்தைக்கு வருகிறார் ஷர்லக் ஹோம்ஸ்!

ம், இவ்வருடம் ஜனவரி 1ம் தேதி, இறுக்கமான காப்புரிமைச் சட்டத்தின் கதவுகளை அகலத் திறந்து, மேற்குலகு இக்கதாபாத்திரத்தைப் பொதுப்பாவனைக்கு விடுவித்துள்ளது. Arthur Conan Doyle உருவாக்கிய இக்கதாபாத்திரம் துப்புத்துலக்கும் கடைசி நாவலான The Case-Book of Sherlock Holmes நாவலின் காப்புரிமை காலாவதியானதின் மூலம் இக்கதாபாத்திரம் எவரின் கற்பனைக்குதிரையிலும் ஏறி சவாரி செய்யும் சட்ட உரிமையைப் பெற்றுள்ளது.

Arthur Conan Doyle
Arthur Conan Doyle

இனியென்ன, ஷர்லக் ஹோம்ஸ் துப்புத்துலக்கும் ஒரு மர்ம நாவலை நீங்களும் எழுதிப் பிரசுரிக்கலாம். சட்டத்தின் கரங்கள் உங்களை அணுகாது! ஆனால், இந்த விடுதலை அத்தனை இலகுவாய் வென்றெடுக்கப்பட்டதல்ல!

Arthur Conan Doyle 1930ல் காலமானதும் அவரின் குடும்ப வாரிசுகளின் பிடியில் இருந்த அவரது நூல்கள் (நான்கு நாவல்கள், 56 சிறுகதைகள்) மற்றும் கதாபாத்திரங்களின் காப்புரிமை இறுக்கமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது. மீறுவோர் மீது காப்புரிமைச்சட்டம் ஏவிவிடப்பட்டது.

2020ல் வெளிவந்த நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பான Enola Holmes சீரியலின் மீதும் இவரின் காப்புரிமை உரிமையாளர்கள் சட்டநடவடிக்கை மேற்கொண்டனர்.

ர்தர் கொனான்டாயில் 1887ல் தனது 27ம் வயதில் எழுதிய A Study in Scarlet நாவல்தான் ஜனவரி 1, 1981ல் முதல் காப்புரிமை காலாவதியான நாவல். ஆனால், 1995ல் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட காப்புரிமை திருத்தல் சட்டம் மீண்டும் இந்நாவலை காப்புரிமை பெட்டகத்தினுள் வைத்து பூட்டியது. சட்டத்தின் பிடிகளில் இருந்து ஜனவரி 1, 2000 விடுதலையானது இந்நாவல். தொடர்ந்து வந்த வருடங்களில் இவரின் நாவல்களின் விடுதலைகள் தொடர்ந்தன. இந்த வரிசையில் கடைசியாக சிறையுடைத்த நாவலே The Case-Book of Sherlock Holmes.

அடுத்த வருடம் ஜனவரி 1ல் இன்னுமொரு பிரபல கதாபாத்திரத்தின் காப்புரிமை காலாவதியாகிறது. அவர்தான் பல தசாப்தங்களாக எமது குழந்தைகளின் உள்ளங்களை மகிழ்வித்த டிஸ்னியின் மிக்கி மவுஸ்! ஆனால், அந்த விடுதலையும் அத்தனை இலகுவாய் கிடைக்கப்போவதில்லை. டிஸ்னி ஸ்தாபனம் ஏற்கனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டதாய் செய்திகள் வருகின்றன!

பொன்முட்டையிடும் வாத்தை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com