ஜெயித்த கட்சியின் தலைவர் தோற்ற கட்சி தலைவரின்  ஆசிகளைக் கேட்கிறார்.

டெல்லி மாநகராட்சித் தேர்தல்
ஜெயித்த கட்சியின் தலைவர் தோற்ற கட்சி தலைவரின்  ஆசிகளைக் கேட்கிறார்.

தேசிய அரசியலில் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள “ஆம் ஆத்மி”க்கு  டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு முறை வெற்றி. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி, இப்போது டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி என 8 ஆண்டுகளில் 4 மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டு கால பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இது பா.ஜ.க.விற்கு ஒரு பாடம். ஒரு நகராட்சி தேர்தலில் பெரிய விஷயம் இல்லை என ஒதுக்கிவிடமுடியாது. இது மக்களின் மனதைச்சொல்லும் “பல்ஸ்” என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்

“நீங்கள் இனி உங்களை கட்சிக்காரர்களாக நினைக்காதீர்கள். நீங்கள் அந்தந்த வார்டின் ஓர் அங்கம். இனி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நாம் ஒன்றிணைந்து ஊழலை ஒழிக்க வேண்டும். இனி அரசியலுக்கு இடமில்லை. தேர்தலுக்கான அரசியல் எல்லாம் முடிந்துவிட்டது. இனி நாம் டெல்லியை மேம்படுத்தும் பணிகளில் கவனத்தைக் குவிப்போம்” என்று  தொடங்கிய கெஜ்ரிவாலின் உரையின் கடைசி வார்த்தைகள்தான் டாப்  “டெல்லியை மேம்படுத்த மத்திய அரசின் உதவி வேண்டும். பிரதமரின் ஆசியும் வேண்டும்.”

உரை: தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வெற்றி உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், "எங்களுக்கு வெற்றியை அள்ளித்தந்த டெல்லி மக்களுக்கு அன்பும் நன்றியும்.

எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை அறிந்து அவர்களின் குறைகளை முதலில் நிவர்த்தி செய்வோம்" என்றார்.

மணீஷ் சிசோடியா பெருமிதம்: "இன்று டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு வெற்றி தருவதோடு நிற்கவில்லை. பா.ஜ.க.வை, அதன் ஊழலை தோற்கடித்துள்ளனர். 15 ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு டெல்லி மாநகராட்சியை ஆட்டிவைத்தவர்களின் அதிகாரம் பறிபோயுள்ளது. எங்கள் மீது இப்போது பெரும் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. மக்கள் ஆம் ஆத்மி வழியில் நேர்மையுடன் வாக்களித்துள்ளனர்" என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com