ப்ளூ – க்ரீன் – பர்பிள் – ஆரஞ்சு – ரெட்:– எதை குறிக்கிறது தெரியுமா?

ப்ளூ – க்ரீன் – பர்பிள் – ஆரஞ்சு – ரெட்:– எதை குறிக்கிறது தெரியுமா?

மது சென்னை மாநகரில் பலரும் பொது போக்குவரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரில் வேலை வாய்ப்புகள் கொட்டிகிடப்பதால் பலரும் சென்னைக்கு படையெடுத்து வருவது காலம் காலமாக நடப்பதுதான்.

சென்னையில் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டே போனது. இது ஒரு பக்கம் இருக்க பெட்ரோல் விலை, டீசல் விலை என அத்தியாவசிய தேவைகளின் விலைவாசிகளும் உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் மின்சார ரயிலையே பயன்படுத்தினர்.

முன்னதாக மெட்ரோ ரயில் என்பது வெளிநாநிலங்களில் மட்டும் தான் இருந்தது. சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சென்னையில் மெட்ரோ கொண்டு வரப்பட்டது.

சென்னை மெட்ரோவின் கட்டுமானம் 2009 இல் தொடங்கியது. மெட்ரோ நிர்வாகம், முக்கிய பகுதி, தேவையான பகுதி, உள்நகரம் என தனித்தனியாக பிரித்து தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அப்படி ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு வண்ணத்திலான லைனை குறிக்கிறது.

தற்போது, இரண்டு சென்னை மெட்ரோ ரயில் பாதைகள், அதாவது புளூ லைன் மற்றும் கிரீன் லைன் மட்டுமே இயக்கப்படுகின்றன. பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இந்த வரவிருக்கும் கோடுகள் சில இடங்களில் மிக உயரமாகவும், சில இடங்களில் நிலத்தடியிலும் இருக்கும்.

ப்ளூ லைன்:

மெட்ரோ அமைப்பின் முதல் பிரிவான ப்ளூ லைன் ஜூன் 29, 2015 அன்று திறக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளை தேர்வு செய்து முதலில் மெட்ரோ ரயில் இணைப்பை தொடங்கினர்.  இது தான் விம்கோ நகர் டிப்போ - சென்னை சர்வதேச விமான நிலையம் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் திட்டமாகும். இதில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கும். இது 32.6 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

க்ரீன் லைன்:

ப்ளு லைனை தொடர்ந்து தொடங்கப்பட்டது க்ரீன் லைன். இரண்டாவதாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவைக்கு இடையில் மொத்தம் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இது 22 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

Inter Corridor லைன்:

டுத்ததாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் சென்னை சென்ட்ரல் - சென்னை சர்வதேச விமான நிலையம் வரை செல்லக்கூடிய ரயில் சேவை திட்டமாகும். இதுதான் கடைசியாக முடிந்த திட்டமாகும். இதில் மொத்தம் 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கும்.

Purple லைன்:

ந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்றாலும், இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திட்டம் மாதவரம் பால் காலனி - சிறுசேரி சிப்காட் 2 வரை செல்லக்கூடிய ரயில் சேவையாகும். இதில் மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கும். இருக்கும் திட்டத்திலேயே இந்த திட்டத்தில் மட்டும் தான் அதிக ரயில் நிலையங்கள் உள்ளன. இது 45.8 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

ஆரஞ்சு லைன்:

ந்த திட்டம் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லக்கூடியதாகும். இதில் மொத்தம் 30 ரயில் நிலையங்கள் அடங்கும். அதிக போக்குவரத்து நெரிசலை கொண்ட பூந்தமல்லி வாசிகளுக்கு இந்த மெட்ரோ திட்டம் மிகவும் கைக்கொடுக்கும். இது 26.1 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

ரெட் லைன்:

ந்த திட்டம் மாதவரம் பால் காலனி - சோழிங்கநல்லூர் வரை செல்லக்கூடிய ரயில் சேவையாகும். இதில் மொத்தம் 48 ரயில் நிலையங்கள் உள்ளன. இது 47 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த சிவப்பு லைன் தான் அனைத்து திட்டங்களில் கடைசி திட்டமாகும். அதிக கிலோமீட்டர் கொண்ட திட்டமும் ஆகும்.

இப்போது நடந்து வரும் மெட்ரோ பணிகளால் நாம் தினம் தினம் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். பல சந்தர்ப்பங்களில் வெறுத்தும் போகிறோம். ஆனால் இப்பணிகள் முடிந்து நாம் அண்ணாந்து பார்க்கையில் நம்ம சிங்கார சென்னை சிறப்பு மிகு சென்னையாக மாறி இருக்கும் தானே? அது நமக்கு பெருமிதம் தானே? பொதுமக்களே! மெட்ரோ ரயிலில் பிரயாணிக்கத் தயார் ஆகுங்கள்.

இந்த மெட்ரோ திட்டம் இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு பிறகு முழுமையாக முடிவடைந்துவிடும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து வருகின்றது.

நம்பிக்கை வைப்போம். அந்நாளை எதிர்நோக்கி இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com