தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நூல் அறிமுகம்
தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

(வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)

த.செ. ஞானவேல் என்பவரிடம் பிரகாஷ் ராஜ் தன் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி “எதை பிரசுரிக்க வேண்டும், எதை பிரசுரிக்க வேண்டாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று விட்டிருக்கிறார். அதனால் நூல் ஆசிரியர் பிரகாஷ் ராஜ். எழுத்தாக்கம் த.செ. ஞானவேல். 

தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். “இதனால் இழந்த நட்புகளும் உண்டு. புதிதாய் கிடைத்த நட்புகளும் உண்டு” என்கிறார். சில உண்மைகள் கரண்ட் கம்பியில் கை வச்ச மாதிரி சுரீர்னு திருப்பி அடிக்கும். சில உண்மைகள் ஓவியன் கை தூரிகை போல் அழகா பதிவாகி இருக்கிறது.

 மகாபலிபுரம் பகுதியில் இவருக்கு ஒரு தோட்டம் இருக்கிறதாம். அதில் ஒரு ஓலைக் குடில். கூரை மட்டும் தான். சுவர் கிடையாது. நாலா பக்கமும் கலர் கலரா பூக்கள், செடி கொடிகள் , காய் கனிகள். இவர் மகன் சித்தார்த்தன் இறந்தபோது அந்த தோட்டத்தில் புதைத்திருக்கிறார். அப்போது நண்பர் ஒருவர் "அது மிகவும் விலை மதிப்புள்ள இடம். உங்க மகனைப் புதைத்ததால் விலை குறையலாம்" என்று சொன்னாராம். எதையும் பணத்தை மட்டுமே வைத்து அளவீடு செய்பவர்களுக்கு உணர்வின் மதிப்பு புரியாது. பணம் நம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சமாகிட்டா பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்கிறார். உண்மைதான். எவன் பணத்தோட காலுக்கு கீழே போனாலும் அது துவைச்சு துவம்சம் பண்ணிடும் என்கிறார். 

அவரே சொல்கிறார், அவரவருடைய வாழ்க்கையை அவரவரையே வாழ விடுங்கள். நம் அனுபவங்களை போதனைகளாகத் திணிக்க வேண்டாம். அதன்படியே இந்த புத்தகத்தை ஒரு அனுபவங்களின் தொகுப்பாக எடுத்துக் கொண்டு நமக்கான வாழ்க்கைப் பாதையில் முன்னேறலாம். வாசித்தால் ரசிக்க கூடிய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : சொல்லாததும் உண்மை.

ஆசிரியர்: நடிகர் பிரகாஷ்ராஜ்

 வம்சி பதிப்பகம்

விலை 250/-

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com