பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 
20 எளிய வழிகள் இதோ:

ணத்தைச் செலவு செய்யாமல், நேரத்தைப் பயனுள்ள வகையில்  செலவழிக்க கணவன் – மனைவிக்கு இதோ சில யோசனைகள்;

1.   டற்கரை, ஆற்றுப்படுகை, பூங்கா, நூலகம், கோயில்கள், வரலாறு சார்ந்த இடங்களுக்குச் சென்று காற்று வாங்கி, காலார நடந்து தகவல் அறிந்து நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாம்.

2.   வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் வரும் திரைப்படங்களைக் கண்டுக் களிக்கலாம்.

3.   பிடித்த உணவினை இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டு மகிழலாம். சேர்ந்து சமைத்தால் சுவை கூடுமே!

4.   திர்காலத்திற்கான வாழ்க்கைத் திட்டங்கள் மற்றும் வீட்டிற்கான நிதித் திட்டமிடலைத் தொடங்கலாம்.

5.   றிவு சார்ந்த புதிய விஷயங்களை இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, குரோஷே போன்ற கைவினைக் கலைகள்.

6.   வீட்டினை, வாகனத்தைச் சுத்தம் செய்யலாம். வீட்டில் அடைசல்களை ஒழிக்கலாம். அவசியம் இல்லாத பொருட்களை வகைப்படுத்தி, அவற்றை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாம் அல்லது olx, quikr போன்ற இணைய தளங்களில் விற்பனைக்குப் பதிவேற்றலாம்.

7.   கோயில்களிலோ அல்லது ஆசிரமங்களிலோ இருவரும் சேர்ந்து தொண்டு செய்யலாம். வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு ஏதேனும் நல்லதொரு விஷயத்தை சொல்லித் தரலாம். உதாரணமாக, கர்நாடக சங்கீதம் தெரிந்தால் சில பாட்டுக்களைச் சொல்லித் தரலாம்.

8.   வீட்டில் இருந்தபடியே, அட்டை விளையாட்டுகளான, பரமபதம், சீட்டுக் கட்டு, சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம். வெளியில் விளையாடும் விளையாட்டுக்களான பூப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுக்களைச் சேர்ந்து விளையாடலாம். சுடோகு, குறுக்கெழுத்து போன்ற தினசரிகளில் வரும் போட்டிகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணலாம்.

9.   வீட்டில் உள்ள பழைய புகைப்படங்களை மறுபடியும் திருப்பி பார்க்கலாம் அதனைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழலாம்.

10.  வீட்டின் செலவுகளை, வரவு செலவு கணக்கினை மறுபடி சரிபார்த்து எந்தெந்த செலவுகளைக் குறைக்கலாம் எவ்வாறு பணம் சேமிக்கலாம் என்று திட்டமிடலாம். வரவு செலவு கணக்கு சரிபார்த்தபின், வீட்டிற்கான நிதித் திட்டமிடலைத் தொடங்கலாம்.

11.  திர்காலத்தில் சுற்றுலா செல்லவுள்ள திட்டங்களைக் கலந்தலோசனை செய்து, சுற்றுலா செல்ல உள்ள இடங்களை வரிசைப்படுத்தலாம்.

12.  யோகாசனங்கள் செய்யலாம். உடற்பயிற்சி செய்யலாம். சேர்ந்து செய்யும் பொழுது ஒருவருக் கொருவர் ஊக்கப்படுத்திக் கொள்ள முடியும்.

13.  றவினரையோ, நண்பரையோ குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்து இரு குடும்பங்களும் சேர்ந்து சமைத்து, உண்டு, அளவளாவி நேரத்தைச் செலவிடலாம்.

14.  வீட்டில் செடிகள் இருக்கும்பட்சத்தில் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கலாம். தோட்டம் போட்டு, பராமரித்து பயனடையலாம்.

15.  ருவரும் சேர்ந்து ஏதேனும் ஒரு புது மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருவரும் அளவளாவி தங்கள் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

16.  வீட்டில் நெடுங்காலத்திற்கு உபயோகமாக இருக்கும் வண்ணம், ஊறுகாய், வடகம் போன்றவற்றைச் சேர்ந்துத் தயாரித்துச் சேர்த்து வைக்கலாம்.

17.  கூட்டாக தியானம் செய்யலாம் அல்லது சுலோகமோ அல்லது பஜனை பாடல்கள் சேர்ந்து பாடலாம். தனியாக செய்யும் இறை காரியங்களை விட கூட்டாக செய்யும் இறைக் காரியங்கள் அதிக நல்ல அதிர்வினை ஏற்படுத்த வல்லது.

18.  தெரிந்த திரைப்படப் பாடல்களை பாடலாம். அந்தாக்ஷரி போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.

19.  நிரல் மொழிகளில் விருப்பம் இருப்பின் , கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் இருவரும் பங்கு பெறலாம். அல்லது புதிய தொரு, நிரல் மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

20.  தைகளில் விருப்பமிருப்பின் முன்பு படித்த கதைகளை விவாதிக்கலாம் அல்லது இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதும் முயற்சியில் இறங்கலாம். புத்தகம் படித்துவிட்டு, புத்தகத்தைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

இவ்வாறு காசு செலவில்லாமல், பொழுது போக்குவதற்கு தம்பதிகளுக்கு பல்வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு சேர்ந்து பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடுவதால், தம்பதிகளிடைய புரிதலும் மேம்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com