சந்திரயான் 3 உருவாக்க யாரெல்லாம் உதவினார்கள் தெரியுமா?

சந்திரயான் 3 உருவாக்க யாரெல்லாம் உதவினார்கள் தெரியுமா?

ந்திரயன் – 3 திட்டத்தின் வெற்றி வாயிலாக விண்வெளி பயணத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்தியா, வேறு யாரும் எட்ட முடியாத உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இதுவரையில் எந்தொரு நாடும் அடையாத தென் துருவத்தை அடைந்தது முதல் சாப்ட் லேண்டிங்-ஐ சாத்தியப்படுத்தியது வரையில் அனைத்துமே சாதனைதான். இந்த நிலையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி என்றால் மிகையில்லை,

சந்திரயான்-3 திட்டத்தின் ராக்கெட், ரோவர், லேண்டர், பூஸ்டர் ராக்கெட் என அனைத்திலும் கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்களித்தும்  பணியாற்றியும் உள்ளன. அதை பெருமைப்படும் விஷயமாகவும் அறிவித்து வருகின்றன.

 டாடா குழுமத்தின் Tata Consulting Engineers Limited (TCE) என்ற நிறுவனம் சந்திரயான் 3 ராக்கெட்டின் கிரிட்டிக்கல் சிஸ்டம்ஸ் மற்றும் சம் சிஸ்டம்ஸ்-ஐ சொந்தமாகவும், தனித்துவமாகவும் தயாரித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வாகன அசம்பிளி பில்டிங் மற்றும் மொபைல் லான்ச் பெடஸ்ட்ரியல் ஆகியவற்றை தயாரித்துள்ளது.

கோயம்புத்தூரில் Chakradhara Aerospace என்ற ஒரு நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தில் இன்ஜின் மாடியூல், டாராக் மோட்டார்ஸ், பிரஷர் டிரான்ஸ்டியூசர்ஸ் ஆகியவைற்றை தயாரித்துக் கொடுத்துள்ளது. இது கோயம்புத்தூர் தொழிற்துறைக்கு அடையாளமாக விளங்கும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ்-ன் கிளை நிறுவனமாகும்.

L&T நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தின் LVM3 M4 ராக்கெட்டில் ஹெட் எண்ட் செக்மென்ட், மிடில் செக்மென்ட் மற்றும் நோசில் பக்கெட் ஃபிளேன்ஜ் போன்ற முக்கியமான பூஸ்டர் பிரிவுகளை தயாரித்து சோதனை செய்துள்ளது.

Mishra Dhatu Nigam நிறுவனம் கோபால்ட் மற்றும் நிக்கல் அடிப்படை உலோகக் கலவைகள், டைட்டானியம் உலோகக் கலவைகள் மற்றும் LVM3/M4 ஏவுகணை வாகனத்தின் பல்வேறு கூறுகளுக்கான சிறப்பு இரும்புகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

BHEL நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தின் பேட்டரி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. Hindustan Aeronautics நிறுவனம் நேஷ்னல் ஏரோஸ்பேஸ் லேப்ஸ் உடனும், எல் அண்டி டி உடனும் இணைந்து PSLV ராக்கெட்-ஐ கட்டமைத்தது.

Walchandnagar Industries நிறுவனம் LVM3 ராக்கெட்டின் முக்கியமானs200 பூஸ்டர் பிரிவு மற்றும் பல்வேறு சப்சிஸ்டம்ஸ் உருவாக்கியுள்ளது. MTAR Technologies நிறுவனம் பல்வேறு உதிரிபாகங்களை தயாரித்துக்கொடுத்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கோவை- கொச்சி நெடுஞ்சாலையில் கஞ்சிக்கு அருகே உள்ளது இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (ஐ.டி.ஐ) . இது தான் சந்திரயான் துல்லியமாக தரை இறங்க உதவும் தொழில்நுட்பமான ஆர். எம். எஸ். ஏயை  தயாரித்து வழங்கியது.

சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி உருவாக்கி தந்த சோனா ஸ்பீட் எனும் மோட்டார் தான் இஸ்ரோவின் RLV LEX மெஷினின் தன்னாட்சி தரையிறக்கத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இது அக்கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கியது.

நிலவில் விக்ரம் லேண்டரை  தரையிறக்கம் செய்யும் முன் நிலவின் தரையைப் போன்றே உள்ள எரிகல் படிவ பாறை மண் போன்றே உள்ள நாமக்கல் பகுதியில் உள்ள மண் மாதிரியை கொண்ட தரையில் விக்ரம் லேண்டரை இறக்கி சோதனை செய்தார்கள். இதற்கான மாதிரி மண்ணை வழங்கியவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள்.

இன்னும் இப்படி பல நிறுவனங்களின் சிறிதும் பெரிதுமான பங்களிப்பு அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை. பெருமிதத்துக்கு உரியவை. பாரத தேசத்திற்கே பெருமை சேர்ப்பவை. இந்த கூட்டு முயற்சியும் ஒற்றுமையும்தான் நம் நாட்டின் உலகளவில் மேலும் உயர்த்தி உள்ளது!

வாழ்க பாரதம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com