மற்றவர்களை ஈர்க்கும் தன்மை கொண்ட காந்திஜி!

மற்றவர்களை ஈர்க்கும் தன்மை கொண்ட காந்திஜி!

அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி!

சுவாரசியமான செய்திகள்!

ர்தார் வல்லபாய் படேல் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தார். ஒரு சமயம் அகமதாபாத் கிளப்பில் Bridge ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கையில், விவசாயி போல தொற்றமளித்த ஒரு நபர் அவரது மேஜைக்கருகே வந்து அனைவரையும் தன்னுடைய பேச்சைக் கேட்கும்படி அழைத்தார். படேல் சிறிதும் ஆர்வம் காட்டாமல் விளையாடச் சென்றுவிட்ட போதிலும், விவசாயி மாதிரி வேட்டி அணிந்த மனிதரைப் பற்றிய சிந்தனை ஏதோ ஒரு வகையில் அவரை ஆர்வமாக்கியது. சற்றே யோசித்தவர், விளையாட்டைத் தொடராமல், பேச்சைக் கேட்கச் சென்றார். அந்த நபர் காந்திஜியென அறிந்தார். காந்திஜி பேசியதைக் கேட்டதும், படேல் உடனே உப்பு சத்தியாக்கிரகத்திற்குச் செல்ல முடிவெடுத்தார். தான் அணியும் மேற்கத்திய ஆடைகளைத் தவிர்த்து எளிமையான உடைகளை அணிந்து காந்திஜியுடன் வாழ்நாள் முழுவதும் பணி ஆற்றினார்.

உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் இருவரும் பங்கேற்றதற்காக யெர்வாடா சிறையில் அடைக்கப்பட்டனர். அச்சமயம் படேல், காந்திஜிக்கு Bridge விளையாடுவதுது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்.

காந்திஜிடமிருந்த ஒருவகை ஈரக்கும் சக்தி, படேலின் மனதை மாற்றியது.

கால்பந்தாட்டப் பிரியர் காந்திஜி:

விளையாட்டில் பிரியம் இருந்த  காரணம், காநதிஜி  Bridge கற்றார். தொழில் ரீதியாக விளையாடியதில்லை யெனினும், காந்திஜி ஒரு சிறந்த கால்பந்து பிரியர். தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயம், அவருக்கு கால்பந்து விளையாடும் வழக்கமிருந்தது. அங்கே ஜோகன்னஸ்பார்க்கிலும் பிரிட்டோரியாவிலும் ஆக இரு கால்பந்து கிளப்புகளை உருவாக்கினார். ஹென்றி தோரே மற்றும் லியோ டால்ஸ்டாய் ஆகியோர்களின் எழுத்துகளின் அரசியல் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட காரணம், கிளப்புகளுக்கு அவர்கள் பெயர் இடப்பட்டன.

இறப்பைப் பற்றிக் கவலைப்படாத காந்திஜி (கர்மமே கண் என்பவர்)

ஒரு சமயம் டார்ஜிலிங்கில் காந்திஜி மலை ரெயிலில் பயணம் செய்கையில், திடீரென, எஞ்ஜின் மற்ற பெட்டிகளிலிருந்து பிரிந்தது. இதர பெட்டிகள் பின்னோக்கிச் செல்ல, எஞ்ஜின் மட்டுமே முன்னோக்கிச் செல்ல பெரிய பதற்றம் ஏற்பட்டது. அனைவரும் பீதியடைந்தனர். அச்சமயம் காந்திஜி அமைதியாக தனது செயலாளருக்கு கடிதங்களை குறித்துக் கொள்ளச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது, செயலாளர், பாபு! வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் இப்போது தொங்கிக்கொண்டிருக்கிறோம். அடுத்த வினாடி நாம் உயிரோடு இருப்போமா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது! என்கையில், காந்திஜி “ஒருவேளை நாம் இறந்துவிட்டால் இறந்துவிடுவோம். நாம் காப்பாற்றப்பட்டால், இவ்வளவு நேரத்தை வீணாக்கியிருப்போம். நான் சொல்வதை குறித்துக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார். செயலரும் அதை நடுங்கியவாறே குறித்துக்கொண்டார்.

காந்திஜெயந்தி அனைத்துலக வன்முறையற்ற நாளாக எல்லா நாடுகளிலும் அநுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஜுன் 15, 2007இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானமாகும்.

24 மணி நேரங்கள் நூற்பு வேள்வி மேற்கொண்ட காந்திஜி தமது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. தலைவர்கள் பலர் வற்புறுதிய காரணம், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

‘நம் வாழ்வின் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் துன்பத்தை சந்திக்க நேரிட்டாலும், மனித நேயத்தின் மீது நம்பிக்கையை இழக்கக்கூடாது’ என காந்திஜி எழுதிய குறிப்பிடத்தக்க பொன்மொழியை நினைவு கூர்ந்து செயல்படுவோம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com