வைப்பு நிதியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வைப்பு நிதியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ங்களிடம் குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளது. அதனை எந்த வைப்பு நிதியில் முதலீடு செய்வது என்ற கேள்வி எழலாம். பின்வரும் காரணிகள் மூலமாக, எது சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணமாக, ஒருவரிடம் 1.5 லட்சம் வருமானம் வருகிறது என்று கொள்வோம். அவர் அதனை 5 வருடங்களுக்கு வைப்பு நிதியில் எப்படி முதலீடு செய்கிறார் எனப் பார்ப்போம்.

1. வட்டி விகிதம்; Interest rate

ட்டி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, பணமானது அதிகமாக வளரும்.

உதாரணமாக, வரி போக, 7% வட்டி விகிதம் எனில், 5 வருடங்களில், பணமானது, ரூபாய் 2,10,382 என மாறியிருக்கும்.

வரி போக, 8% வட்டி விகிதம் எனில், 5 வருடங்களில், பணமானது, ரூபாய் 2,20,399 என மாறியிருக்கும்.

எனவே, அதிக வட்டி விகிதம், அதிக பணப் பெருக்கம்.

2. கூட்டு வட்டி கணக்கிடப்படும் இடைவெளி; (Compounding frequency) கூட்டு வட்டி கணக்கிடப்படும் இடைவெளி, குறைய குறைய, பணமானது வேகமாகப் பெருகும். வரி போக, 8% வட்டி விகிதமென்று எடுத்துக் கொள்வோம். கூட்டு வட்டி கணக்கிடப்படும் காலவரையறை,

வருடா வருடம் எனில், ரூபாய் 2,20,399 என மாறியிருக்கும்.

அரையாண்டுக்கு ஒருமுறை எனில், ரூபாய் 2,22,036 என மாறியிருக்கும்

காலாண்டுக்கு ஒருமுறை எனில், ரூபாய் 2,22,892 என மாறியிருக்கும்.

மாதாமாதம் ஒருமுறை எனில், ரூபாய் 2,23,476 என மாறியிருக்கும்.

 3. வைப்பு நிதியின் கால அளவு;

வைப்பு நிதியின் கால அளவு கூடக் கூட, வட்டி விகிதமானது கூடும்.

4. வைப்பு நிதியின் மீதான வரி விலக்கு;

5 வருடத்துக்கு மேற்பட்ட 80C வரி விலக்கு அளிக்கும் வைப்பு நிதிகளில் பணத்தினைப் போடும்போது, முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. வரி விலக்கும் கூட, ஒரு வகை லாபம்தான். 1.5 லட்சத்தில் 30% வரி விலக்கினைப் பெற்றால், அது கிட்டத்தட்ட 45,000 ரூபாய் லாபம் ஈட்டியதைப் போன்றதே.

இதற்கும் மேலாக, தேசிய சேமிப்பு திட்டம் (National Saving Certificate) போன்றவற்றில், கிடைக்கும் வட்டிக்கும் வரி விலக்கு உண்டு.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

5. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்; Senior citizens interest rate

மூத்த குடிமக்கள் எனில், எந்த வங்கியில் அதிக வட்டி விகிதம், மூத்த குடிமக்களுக்கு கிடைக்குமெனப் பார்ப்பது உசிதம்.

6. வைப்பு நிதி சலுகைகள்; Offers

சில வங்கிகள் மறுபடி வைப்பு நிதி தொடங்கும் போது, அதிக வட்டி வழங்கும் சலுகை தருவார்கள். எனவே, ஏற்கனவே, வைப்பு நிதி உள்ள இடத்தில், மறுபடி தொடங்குவது உசிதம். சில வைப்பு நிதிகளில் காப்பீடும் இலவசமாகத் தருவார்கள்.

7. வைப்பு நிதி திட்ட வகை; FD Category

சில வகை வைப்பு நிதிகளில் எளிதாக, பணத்தினை வங்கி சேமிப்புக் கணக்கிற்கு மாற்ற முடியும். உதாரணமாக, Flexi Fixed deposit

8. வங்கியின் நம்பகத்தன்மை: Credibility of bank

திக வட்டிக்கு ஆசைப்பட்டு, சிறிய, நம்பகத்தன்மை இல்லாத வங்கியில் முதலீடு செய்யக்கூடாது. வங்கி சாராத நிதி நிறுவனங்கள் எனில், அவற்றின் மீதான நிதி மதிப்பீடுகள் முக்கியம். உதாரணமாக, Credit rating for Non Banking Financial Corporations.

9. நடுவில் பணத்தை எடுத்தால், அதற்கான அபராதம்; Premature withdrawal penalty

தேனும் அவசரத் தேவைக்கு நீங்கள் பணத்தை எடுக்கும் நிலை வரலாமெனில், அபராத தொகை, அபராத வட்டி இழப்பு எவ்வளவு எனப் பார்க்க வேண்டும்.

10. வங்கியின் அமைவிடம்; Location

ங்கிகளுக்கு பல கிளைகள் இருந்து, எளிதில் செல்வதற்கு ஏதுவாக இருத்தல்

11. வங்கியின் இணைய, கைபேசி சேவைகள்; Net banking, mobile banking

ங்கியின் இணைய, கைபேசி சேவை மூலமாக, எளிதில் வைப்பு நிதியினை தொடர்வது, மீட்சி செய்வது போன்ற சேவைகள்.

12. வங்கியின் வாடிக்கையாளர் சேவை; Customer care

ங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் சேவை மூலமாக, எளிதில் வைப்பு நிதி சம்பந்தமாக பரிவர்த் தனைகள் செய்வது மேற்குறிப்பிட்ட  பல்வேறு பரிமாணங்களை எண்ணிப் பார்த்து, பணத்தினை நன்கு பெருக்கும் வைப்பு நிதியினைத் தேர்ந் தெடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com