கல்கி வழங்கும் "கலைஞர் 100"!

கல்கி வழங்கும் "கலைஞர் 100"!

www.kalkionline.com வழங்கும் "கலைஞர் 100" என்ற தலைப்பின் கீழ் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பகுதியை வரும் 2023 ஜூன் 3ம் தேதி முதல் ஒரு மாத காலம் கொண்டாட கல்கி ஆன்லைன் குழுமம் முடிவெடுத்துள்ளது. இந்த ஒரு மாதகால “கலைஞர் 100” சிறப்பு பகுதியில் கல்கி வாரஇதழின் 80 ஆண்டு களஞ்சியத்தில் இருந்து.

  • கலைஞர் கல்கிக்கு அளித்த EXCLUSIVE பேட்டிகள்

  • கலைஞர் குறித்த பரபரப்பான Cover Storyகள்

  • கலைஞரைத் தட்டிக் கொடுத்த கல்கி தலையங்கங்கள்

  • கலைஞர் குறித்து வி.வி.ஐ.பி.க்களின் அனுபவ அணிவகுப்பு

  • கலைஞரின் ராமானுஜர் டி.வி. தொடர் அனுபவம்

  • கலைஞர் குறித்து கல்கி குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் : ஸ்பெஷல் கட்டுரை

  • கலைஞர் கேலரி : அசத்தும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு என தேர்ந்தெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் இடம்பெறவுள்ளன.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் சிறந்த அரசியல் ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து மேற்படி சிறப்பு பகுதியை வெளியிடுவதில் கல்கி ஆன்லைன் குழுமம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. கலைஞர் கருணாநிதியின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இந்த சிறப்பு பகுதி புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்பதை கல்கி ஆன்லைன் குழுமம் மனதார நம்புகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com