மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்துவைக்கும் கல்கி ஆன்லைன்: பிரபலங்களின் வாழ்த்துகள்!

Kalkionline 2nd anniversary
Kalkionline 2nd anniversary

த்திரிக்கை உலகில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ள கல்கி குழுமம் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஏற்றவகையில் கல்கி ஆன்லைன் தளமாக புதிய பரிமாற்றத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இயங்கிவருகிறது.

அச்சு இதழில் கோலோச்சி இருந்த கல்கி குழுமம் கல்கி ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியபோது அதனுடைய Page Views 20 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக வாசகர்களின் ஆதரவோடு கல்கி ஆன்லைன் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது கல்கி ஆன்லைன் Page Views 1.5 மில்லியன் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

கல்கி ஆன்லைன் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், பிரபலங்கள் சிலர் அனுப்பிவைத்த வாழ்த்து செய்திகள் கீழே உங்கள் பார்வைக்கு...

கல்கி ஆன்லைன் வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர் மற்றும் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி!

-லக்ஷ்மி நடராஜன்,CEO மற்றும் ஆசிரியர் குழு

காலசக்கரம் நரசிம்மன்- வரலாற்று எழுத்தாளர்: அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கல்கி எனும் பிரம்மாண்ட கோட்டையை கட்டி அதனுடைய கோபுரங்களாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, தியாக பூமி மற்றும் அலை ஓசை ஆகிய காவியங்களை அமைத்தார். அவர் வழிவந்த கல்கி குழுமம் இன்று பல சாதனைகள் புரிந்து தனித்துவத்துடனும், தனக்கென ஓர் அடையாளத்துடனும் இந்த டிஜிட்டல் உலகில் வீர நடைபோட்டு வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

Kaalachakkaram Narasimhan
Kaalachakkaram Narasimhan

கல்கி ஆன்லைனின் மகுடத்தில் ஒளி வீசும் ரத்தினமாக விளங்குவது கல்கி குழும பேனரில் பிரம்மாண்டமாக வெளியான பராக்.. பராக்.. பொன்னியின் செல்வன், வந்தியதேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம் என்ற 16 பாகங்கள் கொண்ட மாபெரும் வீடியோ படைப்பு. வாசகர்களை கல்கியின் பாதையில் அழைத்துச்சென்று அவர்களுக்கு வந்தியதேவன் பாதையிலான அனுபவத்தை கொடுத்து திக்குமுக்காட செய்தது கல்கி. இந்த பயணத்தை வழிநடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கல்கி ஆன்லைன் இன்னும் பல அரிய சாதனைகள் செய்யும் என்பது திண்ணம். கல்கி குழுமத்தாருக்கும், ஆசிரியர் குழுவுக்கும், பணியாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பராக்.. பராக்.. கல்கி You Always Rock...!

பிரபல நரம்பியல் மருத்துவர் Dr.புவனேஷ்வரி ராஜேந்திரன்

கல்கி இதழ் முதன் முதலில் 1941ம் ஆண்டு வெளிவரத் தொடங்கியது. பொன்னியின் செல்வன் நாவலை படைத்த கல்கி அவர்கள் காலம் கடந்தும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு இன்ஸ்பிரேசனாக இருப்பவர். அவருடைய வழிகாட்டுதலில் பயணித்த கல்கி குழுமம் தற்போது டிஜிட்டல் வடிவில் கல்கி ஆன்லைனாக வாசகர்களை சென்றடைகிறது.

Dr. Bhuvaneshwari Rajendran
Dr. Bhuvaneshwari Rajendran

கல்கி குழும அச்சு இதழ்கள் வெளிவந்தபோது எப்படி வாசகர்களை கவர்ந்திழுத்ததோ அதேபோல் கல்கி ஆன்லைன் இன்றைய தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் கல்கி ஆன்லைனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

டாக்டர் லட்சுமி விஜயகுமார் - மனநல மருத்துவர் மற்றும் சிநேகா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர்

கல்கி ஆன்லைன் தளம் குறுகிய காலத்தில் நல்ல தரமான தளமாக அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. அச்சு இதழில் நீண்ட பாரம்பரியம் கொண்ட கல்கி குழுமம் தற்போது ஆன்லைன் வழியாக தரமான செய்திகளை வாசகர்களுக்கு வழங்கிவருகிறது.

Dr. Lakshmi Vijayakumar
Dr. Lakshmi Vijayakumar

கல்கி ஆன்லைன் தளத்தில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றையும் வாசகர்கள் நம்பி படிக்கலாம். கல்கி ஆன்லைன் இரண்டு ஆண்டுகளை கடந்து தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மேலும் மேலும் வளர்ச்சியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆர்விஎஸ் - ஊடகவியலாளர்- (கல்கி ஆன்லைன் தள மேம்பாட்டிற்கு வித்திட்டவர்)

மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் கல்கி ஆன்லைன் தளத்திற்கு வாழ்த்துகள். கடந்த வருடம் இதே ஆண்டில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கல்கி ஆன்லைன் செயல்படத் தொடங்கியது. அச்சமயத்தில், கல்கி ஆன்னலைன் இணைய தளத்தின் வடிவம் மற்றும் அதன் உள்ளடக்கத்தை மறுசீரமைக்கும் பணியில் நிர்வாக மேலாண்மை இயக்குநர் லக்ஷ்மி நடராஜன் அவர்களோடும் மற்றும் கல்கி குழும ஆசிரியர் குழுவோடும் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

R. Venkatasubramanian
R. Venkatasubramanian

கல்கி இணையதளத்தின் வடிவமைப்பு மற்றும் தளத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்கவேண்டும் என தீர்மானிக்க எனக்கு கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டது. நான் பரிந்துரைத்த பல விஷயங்களை ஏற்றுக்கொண்டு லக்ஷ்மி நடராஜன் மேடம் செய்த பல நகாசு வேலைகளுடன் கல்கி இணையதளம் பிரமாதமான தளமாக வளர்ந்து Digital வாசகர்கள் பல ஆயிரம் பேரை பெற்றது. கல்கி ஆன்லைன் மேன்மேலும் ஏற்றங்கள் அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

சூப்பர் சுப்பு - பாடலாசிரியர், திரைகதை ஆசிரியர் மற்றும் இயக்குநர்

கல்கி இணையதளத்தின் ஒரு சகவாசகனாக தனது 2ம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கல்கி ஆன்லைனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்.கல்கி என்று சொன்னாலே எனக்கு நினைவுக்கு வரும் விஷயம் அதில் வெளிவரும் தரமான திரைப்பட விமர்சனங்கள்தான். அதேபோல், சினிமா கிசுகிசுக்கள் மற்றும் தனி நபர்களின் தனிப்பட்ட பர்ஸ்னல் விஷயங்கள் குறித்து செய்திகளை வெளியிடுவது போன்ற செயல்களை செய்யாமல், Professionalகளை Professional ஆகவே அணுகி அதேநேரம் நேர்மையான விமர்சனத்தோடு இலக்கியரசம் கெடாமல் பொதுமக்களை சென்றடையும் செய்திகள்தான் கல்கி இதழில் வெளியாகும்.

Super subu
Super subu

அதேபோல் கடந்த இரண்டு வருடங்களாக கல்கி இணையத்திலும் இந்த நெறிமுறைகளை பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள். மேலும் வாசகர்களின் ரசனைகளை மேம்படுத்த தேவையான அனைத்து விஷயங்களையும் கல்கி இணையதளம் வழங்கி வருகிறது. கல்கி ஆன்லைன் இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் கல்கி இணையதள குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளேன்.

R. PONNUSWAMY - FOUNDER AND CHAIRMAN, AROMA GROUPS

There has been over a decade of happy relationship between AROMA and KALKI GROUP and we are delighted to be a part of Kalki Group’s successful journey.

R. Ponnusamy - Founder and Chairman, Aroma Groups
R. Ponnusamy - Founder and Chairman, Aroma Groups

The respect with which Kalki approaches its advertising clients is to be much appreciated. Committed service and continuous communication is the strength of Kalki Group.

On the occasion of entering its third year in the digital platform, we wish Kalki Group all the very best for winning more laurels.

பிரபல கர்நாடக இசைப் பாடகி 'செவாலியே' அருணா சாய்ராம்

‘கல்கி’ நேயர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள். எனது வாழ்க்கையில் கல்கி பத்திரிக்கைக்கு இன்றியமையாத ஒரு இடமுண்டு. எனது சிறுவயதிலிருந்தே வாராவாரம் கல்கி இதழ் வந்தவுடனே அதில் வெளிவந்திருக்கும் ஆன்மிக விஷயங்கள், சங்கீத விமர்சனங்கள், கல்கி அவர்கள் எழுதிய அழகான, மிகவும் நேர்த்தியான, இடையிடையே நகைச்சுவை இழையோடும் நாகரிகமான விமர்சனங்கள் போன்று எத்தனையோ நல்ல விஷயங்களை கல்கி இதழில் படித்து ரசித்து இருக்கிறேன்.

Aruna Sairam
Aruna Sairam

அந்தப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் என்னென்ன உண்டோ, அத்தனையும் ஒருவருடைய குணநலன்களை சீரமைத்து செம்மைப்படுத்தும் விஷயங்கள். இதுபோன்ற ஒரு தொன்மையான வாரப் பத்திரிக்கையான கல்கி, தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இணையதள வடிவிலும், யூடியுப் வடிவிலும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

பல லட்சம் பார்வையாளர்களுக்கும் மேலாக கல்கி இணையதளச் செய்திகளை வாசிக்க முடிகிறது, பார்க்க முடிகிறது, ரசிக்க முடிகிறது, அதனோடு இணைய முடிகிறது எனும்போது, இதனை ஒரு மிகப்பெரிய சாதனையாகத்தான் கருத முடிகிறது. இந்த இணையதளத்தை இத்தனை அழகோடும், பொலிவோடும், தரத்தோடும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் கல்கி நிறுவனத்தாருக்கும், கல்கி குழும குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள். கல்கி இணையதள வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com