கவிதை
கவிதை

எப்படிக் கற்றுத் தருவோம்!

தமிழில்: ஷைலஜா

1949ல் வெளிவந்த அட்லாண்டிக் மாத இதழ்  ஒன்று கண்ணில் பட்டது. அதில் Miltred Howland  அவர்கள்  குழந்தைகளுக்காக ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்த ஆங்கில வரிகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில கவிதையும் தொடர்கிறது!

எப்படிக் கற்றுத் தருவோம்!

தன் நிலையினின்றும் உயர்ந்து

விண்ணையும் தொடும் ஆற்றலை

 ஒரு குழந்தைக்கு

நாம் எப்படிக்கற்றுத்தருவோம்-மிகவும்

கீழான நிலையில் தாழ்ந்துவிட்ட நாம்?

 நாணயமாகவும்  கௌரவமாகவும் வாழ்ந்திரு

உண்மையின் பொருட்டே  உயிர் வாழ்ந்து

அதற்காகவே உயிர் விடு’ என்று ஒரு

குழந்தையிடம் எப்படிச்சொல்வோம்

பொய்யோடு பொய்யாய் வாழ்ந்துவிட்ட நாம்?

வாழ்க்கையின் சரியான பாதை அன்பின்

 வழிதான்’ என்று அவனிடம் எப்படிக் கூறுவோம்

வெறுக்கவே கற்றுவிட்ட நாம்?

பிரார்த்திக்கக் கற்றுக் கொடுக்கவும், அவனை

 பக்தனாக  மாற்றவும் எப்படித் துணிவோம்-

பிரார்த்தனையே செய்தறியாத நாம்?

How shall we... by Miltred Howland

A child to reach

Beyond himself

And touch the stars

We who stooped so much?

How shall we tell

A child to dwell

With honour ,live and die

For Truth

We who have lived a lie?

 How shall we say

To him' the way

Of life is through the gate

Of Love'

We, who have learned to hate?

 How shall we dare

to teach him Prayer

and turn him toward the way

Of faith

We who no longer pray?

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com