பிரணவ மூர்த்தி!

கல்கி குழும ‘தீபம்’ ஆன்மிக இதழின் முதல் பிரதியில் (தீபம், அக்டோபர் 05 2011தேதி) வெளிவந்த முதல் கட்டுரை!
பிரணவ மூர்த்தி!
Kalki vinayagar
Kalki vinayagar

கல்கி குழும ‘தீபம்’ ஆன்மிக இதழின் முதல் பிரதியில் (தீபம், அக்டோபர் 05 2011தேதி) வெளிவந்த முதல் கட்டுரை!

 -ஜபல்பூர் நாகராஜ சர்மா

ணநாதம், மஹேஸ்வரம், அம்பிகாம், விஷ்ணும், ஆதித்யம், கௌமாரம் என்ற ஒரு வழக்கு உண்டு. இதையே ஷண்மத ஸ்தாபனம் என்பர். அதாவது கணபதி வழிபாடு, சிவனைத் துதித்தல், தேவியைப் போற்றுதல், நாராயணனை சரணாகதி அடைதல், சூரியனை ஆராதித்தல், முருகனை பிரார்த்தித்தல் எனும் ஆறு வகை வழிபாடுகளைப் பாகுபடுத்தி, வெகு எளிதாக இறைவன் அருளைப் பெற ஆதிசங்கரர் வழிகாட்டியுள்ளார்.

இத்தகைய வழிபாடுகளில் முதலாவது காணாபத்யம்.

மூஷிக வாஹன மோதக ஹஸ்த

சாமரகர்ண விலம்பித ஸுத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ந விநாயக பாத நமஸ்தே!

'ஓம்' காரம் எனும் பிரணவ ஸ்வரூபியே ஸ்ரீவிக்ன விநாயகமூர்த்தி. ஜீவராசிகளின் மூலாதாரத்தில் அமர்ந்து ஜீவனைப் பாதுகாப்பவரும் அவரேதான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தோன்றியது இந்த பிரபஞ்சம் என்று எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள். அந்த
பஞ்ச பூதங்களின் அதிபதியாகவும், நிர்குண பிரம்மத்தின் வடிவமாகவும், சகலத்தையும் தம்முள் அடக்கிக்கொண்ட பிரணவ மூர்த்தியாகவும் காணாபத்யர்கள் உள்ளத்தில் விநாயர் உறைவதாக நம்பப் படுகிறது.

 ணபதியுடைய நாபி பிரம்ம ஸ்வரூபம் என்றும், முகம் விஷ்ணு ஸ்வரூபம் என்றும், நேத்ரம் சிவ ஸ்வரூபம் என்றும், இட பாகம் சக்தி ஸ்வரூபம் என்றும், வல பாகம் சூரியன் என்றும் கூறும் ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது நாம் போற்றும் பிரதான தெய்வங்கள் அனைத்தையும் தம்முள் கொண்டிருப்பவர் கணபதி. இவ்வுண்மையை உபாஸிப்பவர்கள் நன்கு உணரும் வண்ணம், புராண வரலாறுகள் சிறப்பாக அமைந்துள்ளன. இத்தகைய உணர்வுடன் ஐங்கரனை உபாசனை புரிபவர்களே காணாபத்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

 தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும் கணபதியின் உருவம் அற்புதமானது. யானை முகமும், மூன்று கண்களும், இரு செவிகளும், தும்பிக்கையைச் சேர்த்து ஐந்து கரங்களும், பெரும் வயிறும், குறுகிய இரு திருவடிகளும் கொண்ட விநாயர் பிரணவ ஸ்வரூபி என்பதை யானை முகம் விளக்குகிறது. ஐந்து கரங்களும், ஐந்தொழிலை செய்யும் ஆற்றலுடையவை என்பதை உணர்த்துகின்றன. முக்கண்கள் சந்திரன், சூரியன், அக்னியை உணர்த்துகின்றன. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை இடற்பாடுகளால் ஆட்கொள்ளாமல் காத்து, வினை வெப்பத்தைப் போக்கியருளக் கூடியவை. உண்மைக்கொரு விளக்கமாக விநாயகரின் பெருவயிறு. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கிறது.

பாதங்களிலிருந்து கழுத்து வரை மனித ரூபமும், அதற்குமேல் யானை முகமும் கொண்டிருக்கும் கணபதி, மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ ரூபத்தில் பிரம்ம ஸ்வரூபத்தையும் இரண்டும் இணைந்த ஓர் அற்புத நிலையில் காட்சி அளிக்கிறார். ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உணர்த்தும் வடிவம்தான் கணபதியின் ரூபம்.

லகில் எல்லாவித விக்னங்கள் தோன்றக் காரணமாக இருப்பவரும், அவ்விக்னங்கள் விலக அருள் புரிபவரும் விநாயகர்தான். இதனாலேயே அவர் விக்ன விநாயகர், விக்னேஸ்வரர், விக்னாராஜர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

விநாயகருக்கு ப்ரம்மணஸ்பதி என்று அழகிய நாமமும் உண்டு. இவர் ஸ்வானந்தம், ஆனந்தம் எனும் இரு இன்ப நிலைகளுக்கு அதிதேவதையாவார். ஆதலால் இவருக்கு ஸ்வாநந்தேசர் என்றும் பெயர்.

 ளிய வழிபாடுக்கேற்ற தெய்வம் பிள்ளையாரே. யாரும் எந்த சமயத்திலும் சரண் அடையலாம். தவிர, எளிய முறையில், அதிக நியம, அனுஷ்டான விதிகளை கடைபிடிக்காமலும் வழிபட்டு பெரும்பேறு அடையலாம். நெற்றிப் பொட்டில் இரண்டு குட்டி, நாலு தோப்புக்கரணம் போட்டால் போதும். கணேசர் கட்டாயம் அருள்பாலிப்பார்.

கணபதி வழிபாடு நாடு முழுவதும் தீவிரமாக பரவியிருந்த காலத்தில் முகமதியர் வரவினாலும், அவர்களது ஆட்சி காலங்களிலும் மங்கிப் போய்விட்டது. இருந்தும் பீனிக்ஸ் பறவைபோல் புத்துயிர் பெற்ற காணாபத்யம், மராட்டியர் காலத்தில் மகாராஷ்டிராவிலுள்ள மயூர தேசத்தில் புதுப்பாணியில் தோன்றியது. மயூர தேசத்தில் காணப்படும் பிள்ளையார் கோயிலைத் தவிர, அதனைச் சுற்றி ஏழு கணபதி கோயில்களும் தோன்றின. இவற்றை 'அஷ்ட விநாயகர்' என்று அன்போடு அழைத்து ஆராதிக்கின்றனர்.

 அஷ்ட விநாயகர் கோயில்கள்

Morgaon moreshwar

Siddhatek siddhivinayak

Pali ballaleshwar

Theur chintamani

Lenyadri girijatmaj

Ozar vighnahar

Ranjangaon mahaganpati

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com