‘20ஆவது ASEAN – INDIA Summit’ல் பிரதமர் மோடி!

‘20ஆவது ASEAN – INDIA Summit’ல் பிரதமர் மோடி!

20ஆவது ASEAN – INDIA Summit மற்றும் 18ஆவது கிழக்கு ஆசியா Summitல் கலந்துகொள்ளும் பொருட்டு பிரதமர் மோடிஜி இந்தோனோஷியாவின் தலைநகரான ஜகார்தாவிற்கு இன்று காலை வருகை தந்துள்ளார்.

ஆசியான் (ASEAN) என்பது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South East Asian Nations) ஆகும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதார மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்புதான் ASEAN.

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, உறுப்பு நாடுகளிடையே சமூகம், பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி காத்தல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்து உரையாட சந்தர்ப்பத்தை வழங்குதல் போன்றவைகள் இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களாகும்.

ஆகஸ்ட் 6, 1967இல் இந்தோனேஷியாவில் இது ஸ்தாபிதமானது.   ASEAN – இன் குறிக்கோள் ‘ஒரு நோக்கு; ஒரு அடையாளம்; ஒரு சமூகம்’ ஆகும்.

நமது பிரதமர் இதில் கலந்துகொண்டு பேசுகையில்...

“நான் ஒரு பார்வையாளர். வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். Asean Summitல் இரண்டு கருப்பொருள்கள் (Theme) வைக்கப்பட்டு உள்ளன. ஒன்று Asean விஷயங்கள் (matters) மற்றொன்று Epicentric of Growth (வளர்ச்சியின் மையப்பகுதி). சரித்திரம், பூகோளம் ஆகியவைகள் Aseanஐ இணைத்துள்ளது. ‘வசுதைவத குடும்பகம்’ என்கிற இரண்டு வார்த்தைகள் ஆழமான தத்துவத்தைக் கொண்டுள்ளன. இதன் பொருள் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்பதாகும். அனைவரையும் சேர்க்கும் கண்ணோட்டம் கொண்ட இது மொழிகளை, எல்லைகளை, கோட்பாடுகளைக் கடந்து ஒரே பிரபஞ்சக் குடும்பம் என்கிற நிலைக்கு ஊக்கப்படுத்துகிறது. சென்ற வருடம் (2022) பாரத் – ஆசியன் Friendship வருடமாக கொண்டாடப்பட்டது. இது Asean – Indiaவின் 30 வருட கால கூட்டமைப்பை நினைவூட்டும் வகையில் அமைந்ததாகும். ஜி 20 அமைப்பில் இந்தியாவின் தலைமை, மனிதர்களை மையப்படுத்திய கால கட்டமாக இருந்தது பெருமைக்குரியதாகும்” என்றார்.

ஆசியாவின் நோக்கங்கள்:

கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும், சமூக கலாசார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்;

நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிதன் மூலமும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் உறுதிப்பாட்டை ஏற்படுத்துதல்;

ல்வி, தொழில், தொழில் நுட்ப மற்றும் நிர்வாகத் துறைகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்;

மேலும் விவசாயம் – கைத்தொழில் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவைகளில் கூடிய கவனமெடுத்தல்;

தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாசார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை உருவாக்குதல்;

தென்கிழக்கு ஆசிய கற்கை நெறிகளை மேம்படுத்துதல்,

மமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் நெருக்கமான நன்மை மிக்க உறவுகளை உண்டாக்குதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com