வி.என்.ஆர். சார்

வி.என்.ஆர்.  சார்

ந்த தலைமை தபால் அலுவலகத்தின் கவுண்டர் முன்பு , ஒரு கஸ்டமர் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். வயது 60 க்கு மேல் இருக்கலாம்.

"மேடம் நான் டூப்ளிகேட் பாஸ் புக் அப்ளிகேஷன் கொடுத்து இரண்டு மாசம் ஆச்சு .புக் வந்துருச்சா ? அப்புறம் எஸ்.பி. அக்கவுண்ட் என் மனைவி பெயரில் உள்ளது கிளைம் அப்ளிகேஷன் கொடுத்து, 3 மாசம் ஆச்சு இன்னும் கிடைக்கல?"

"ஏன் இவ்வளவு டிலே?"

"எனக்கு தெரியாது சார் ! வந்துருச்சுன்னா, நான் கொடுத்துடுவேன் சார்!"

"இதோட அஞ்சாறு வாட்டி வந்திருப்பேன். இதே பதில் தான் மாத்தி மாத்தி இந்த சீட்ல இருக்கறவங்க சொல்லிக்கிட்டு வரிங்க"

"நம்பலண்ணா பாருங்கசார்!"

வந்தவர் முன்னாடி மற்ற பாஸ் புக்குகளை கொட்டி காண்பித்தார் அந்த அலுவலக பெண்மணி.

"நீங்க வேணுமின்னா உதவி போஸ்ட் மாஸ்டரை பார்த்து கேளுங்க " என்று சொல்லிவிட்டு தன் வேலையில் , மூழ்க ஆரம்பித்தார் அந்த பெண்மணி.

உதவி போஸ்ட் மாஸ்டரரைப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சியா இருந்தது.

அங்கு இருந்தவர் உறவுக்காரர். இவனுக்கும் நமக்கும் பகை வேறு. இவன் தஞ்சாவூர்ல வேலை பார்த்தவன். இங்கே எப்படி?

எண்ண அலைகள் ஆர்பரிக்க மீண்டும் கவுண்டர் பெண்மணியிடம் விசாரித்தபோது ,

"அவர் இந்த ஊருக்கு மாற்றல் ஆகி வந்து மூன்று மாசம் ஆச்சு சார்."

நான் நாலைந்து தடவை பார்த்த போது கவனிக்க வில்லையே?

இவனிடம் முறையிட்டு பிரயோசனம் இல்லை உள் பகையை மனதில் வைத்து பழி வாங்கினாலும் வாங்கலாம். விதண்டாவாதம் தான் பதிலாக வரும் .

"மேடம் உங்க மேல் அதிகாரியை இப்ப பார்க்க முடியுமா?"

"ஓ எஸ் ! இப்ப தான் அவர் சேம்பர் உள்ளே போயிருக்காரு."

"நீங்க உடனே போய் பாருங்க உங்க க்ரிவன்ஸ் எதுன்னுசொல்லுங்க"

"கேம்ப் கிளம்பி போனாலும் போகலாம் "இப்படியே வெளியில் போய் முதல் மாடியில் இருப்பார் பாருங்க "

அந்த கவுண்டர் பெண்மணி அவர் நிலைமையை பார்த்து துரிதப் படுத்தினார்.

அந்த கவுண்டர் பெண்மணி சொன்ன மாதிரி,முதல் மாடி போய் அவர் அறை முன்பு உள்ள போர்டை பார்த்த போது .

கே.வாசுதேவன், பி.காம்., பி.ஜி.எல். துணை கண்காணிப்பாளர் என்று இருந்தது.

"எக்ஸ்குயிஸ் மீ சார்"

"மே ஐ கம் இன்."

"எஸ் பீளிஸ்"

கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவரை பாரத்தும் , அனிச்சையா நான் எழுந்து கொண்டேன்.

"சார் ! சார் நீங்களா"! எங்க சார் இவ்வளவு தூரம்?"

வந்தவரை சேரில் உக்கார வைத்து விட்டு , குடிக்க என் கையினால் , தண்ணீர் கொடுத்துவிட்டு, நின்று கொண்டே பேசினேன்.

அவர் முகத்தை பார்த்தபோது, சோர்வாக காணப்பட்டார். காலையில் டிபன் சாப்டிருக்க மாட்டார் என தோன்றியது

"சார் ஒரு நிமிஷம்"

வெளியே வந்து ஆர்டலியிடம் , ஸ்வீட், அவருக்குப் பிடித்த முறுகலான ரவா தோசை, காபி , ஆரிய பவனில் வாங்கி வரச் சொல்லிவிட்டு, மீண்டும் என் இடத்துக்கு வந்தேன் .

"சார் சொல்லுங்க சார் "

"ஐ ஆம் வெரி ஹாப்பி வாசு . ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ."

"தாங்ஸ் சார் . எல்லாம் நீங்க போட்ட பிச்சை சார் ".

"நீ முதலில் உக்காரு . நின்று கொண்டு பேசாதே"

"சரிங்க சார் இப்ப சொல்லுங்க !”

மூன்று மாதம் முன்பு தன்னுடைய பாஸ் புக் தொலைந்து விட்டதால், டூப்ளிகேட் பாஸ் புக் அப்ளை பண்ணியதாகவும், தன் மனைவி இறந்து விட்டதால் அவர் பெயரில் போட்டு இருந்த எஸ்.பி. அக்கவுண்டில் , உள்ளபணம் திரும்ப பெறுவதற்கு, கிளைம் அப்ளிகேஷன் வெரிபிகேஷன் ஆகி, இன்னும் வராத காரணத்தினால் தனக்கு பாஸ் புக் கிடைக்கவில்லை, கிளைம் பணமும் கிடைக்க வில்லை என்றார். "பேப்பர் உங்க ஆஃபீஸ் லருந்து வெரிஃபிகேஷன் ஆகி வரலேன்னு சொல்றங்கா?" நீங்க போய் நேர்ல வேண்டுமானால் கேளுங்கன்னு, கவுண்டர்ல இருந்த மேடம் சொன்னங்கா" அதான் வந்தேன் "அதற்குள் டிபன் வந்து விடவே சாப்பிட சொன்னேன்.

"ஸ்வீட் அல்வா, அவருக்கு பிடித்த ரவா தோசை பார்த்ததும்,

என்ன வாசு இதெல்லாம் ?"

"இருக்கட்டும் சார்"

"சாப்பிடுங்க . உங்க முகம் சோர்வா இருக்கு. மணி 11 ஆகுது. இன்னும் சாப்பிடலன்னு தோணுச்சு. அதான் வாங்கிட்டு வரச்சொன்னேன்."

"நான் இந்த ஊருக்கு வந்து 6 மாசம் தான் ஆகுது சார். வந்ததிலிருந்து ஒரே வேலை பளு சார்"

வந்தவர் சாப்பிட்டு ,காபி குடித்தவுடன் தெம்பாக,

"ரொம்ப தாங்ஸ் வாசு "

"சார் விடுங்க... இதை போய் பெரிசா சொல்லிக்கிட்டு "

"கோபால் இன்வர்ட ரிஜிஸ்டர் எடுங்க”

"சார் சொன்ன தேதியில், இவரோட அப்ளிகேஷன் வந்து இருக்கான்னு பார்ப்போம்." அப்படியே பெண்டிங் பேப்பர்ஸ் எல்லாம் எடுங்க"

அவர் சொன்ன மாதிரி, என் ஆபிஸ்க்கு போஸ்ட்மாஸ்டர் அலுவலகத்திலிருந்து ,எந்த பேப்பரும் வரவில்லை.

'கோபால், கவுண்டர்ல இருக்கிற ஏ.பி.எம்.ஐ கூப்பிட்டு வாங்க" நான் உத்திரவிட்டேன்.

அடுத்த 5 வது நிமிடம் உதவி போஸ்ட் மாஸ்டர் பாஸ்கர் உள்ளே வந்தார்.

வந்தவர் உட்கார்ந்து இருந்த நபரை பார்த்து, அதிர்ச்சியான போது, நான் கவனிக்க தவறவில்லை.

"என்ன மிஸ்டர் பாஸ்கர் ? ஒங்ககிட்ட இருந்து, எனக்கு பேப்பர்ஸ் ஒன்னும் வரலேய"!

"இல்லை சார் நான் அனுப்பிட்டேன் சார் "'

"நீங்க அனுப்பியிருந்தா, என் இன்வர்ட் ரிஜிஸ்டர்ல பதிவாகி இருக்குமே? பெண்டிங் பேபர்ஸ் ஒரு முறைக்கு இரண்டு தடவை பார்த்தாச்சு. என்னிக்கு அனுப்பினீங்க ? உங்க அவுட்வேர்ட் ரிஜிஸ்டர்ல என்ட்ரி போட்டு இருப்பீங்க! கொண்டு வாங்க. "

அதை எடுத்து வர அவர் கிளம்ப எழுந்தபோது,

"நீங்க ஓக்காருங்க பாஸ்கர்"

"கோபால் போய் அந்த ரிஜிஸ்டரை கேட்டு வாங்கிட்டு வாங்க"

"லெட் மீ செக்"

அடுத்த 10வது நிமிடம் ரெஜிஸ்டரைப் பார்த்தபோது, என் ஆபிசுக்கு , அனுப்பிய மாதிரி ,எந்த விபரமும் காணப்பட வில்லை.

"என்ன பாஸ்கர் வாட் ஹே பண்ட் டு கிளைம் பேப்பர்ஸ்? "வாட் ஏ சீரியஸ் இஸ்யூ ?"

"ஒரு சீனியர் வாடிக்கையாளரை அலக்கழிச்சு இருக்கீங்க?"

"பேப்பர் இன்னும் வெரிஃபிகேஷன் ஆகி வரலன்னு ,ஒரு பொய் தகவல் வேறு சொல்லிகிட்டு இருக்கீங்க ?"

"என்ன பண்ணுவீங்களோ தெரியாது ! தேடி கண்டுபிடித்து இன்னும் அரை மணியில் என் டேபிளுக்கு பேப்பர் வந்தாகனும். போய் தேடி கொண்டாங்கா."

இவ்வளவு கடுமையான உத்திரவு நான் போட்டதை பார்த்தும், வந்தவருக்கு நம்பிக்கை கொடுத்து இருக்க வேண்டும். மனதுக்குள் சந்தோசமானதை பார்க்க நேர்ந்தது.

"தாங்ஸ் வாசு”

“சார்... இது என் கடமை "

"ஆமாம் சார்? உங்க மனைவி அக்கவுண்ட்ல நாமினேஷன் போட்டு இருக்கா?’

“யாரு நாமினி ? நீங்க தானா? இல்லை வேறு யார் பெயராவது போட்டு இருக்கா?" கேள்வி மேல் கேள்வி அடுக்கினேன் .

"இல்லை வாசு நாமினேஷன் போடல"

"என்ன சார்... ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணும் போதே யார் நாமினின்னு கேட்டு இருப்பங்காளே !"

"அவங்க சொல்லாட்டி போனாலும் , படிச்ச நீங்க உங்க குடும்பத்தில் உள்ள உங்க பெயர், அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் போட்டு இருக்கலாமே?

"இப்ப பாருங்க ! நாமினி பேரு போடாததால், எவ்வளவு சிரமங்கள்ன்னு"?

நான் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வில்லை.

தலையை தொங்க போட்டுக் கொண்டார் .

நான் பேசிய பேச்சு நிச்சயம் அவருக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும் .

"இதே மனிதர் தான் என் பள்ளி வாழ்க்கையில் என்னை அசிங்கப்படுத்தியதோடு அவமானப்படுத்தியவராச்சே?

என் நினைவலைகள் பின் நோக்கி சென்றது.

••• ••• •••

ந்த புகழ்பெற்ற பள்ளியில் பதினோராம் வகுப்பு "பி" செக்ஷன்.

மொத்தம் 56 பேர். அதில் நான்கு மாணவிகள். அரையாண்டு வரை மற்ற மாணவர்கள் மத்தியில், என்னை கொண்டாடியவர், அந்த சம்பவத்துக்குப் பிறகு என்னை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தார்.

அவர் எங்கள் தெருவில் மையப் பகுதியில் உள்ள வீட்டில் குடி இருந்தார். நாங்கள் தெருவின் ஆரம்பத்தில் நாலாவது வீடு. யார் வந்தாலும் எங்கள் வீட்டை கடந்து போக வேண்டும் .

அன்று ஞாயிறுக் கிழமை. மதியம் 4 மணிக்கு, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கால் சட்டை தெரியும்படி, கையில் கிரிக்கெட் பேட்டை வைத்துக் கொண்டு, வீட்டுக்குள் இருந்து வேகமா, வெளியே ஓடி வரவும், அவரை கடந்த அடுத்த நொடி, கையில் இருந்த பேட் கீழ விழுந்துவிட , அவரை பார்த்த பயத்தில் அனிச்சையா வேட்டியை இறக்கி விட்டு "சாரி சார்" என்றேன்.

ஆனால் அவர் காதில் வாங்காமல் என்னை கடந்து போக, மறுநாள் வகுப்பில் ஜாடை மாடையாக என் பெயர் குறிப்பிடாமல் என்ன பிரயோசனம்? ரேங்க் வாங்கியும் வாத்தியார்ன்னு சிலருக்கு மரியாதை துளி கூடதெரியவில்லை என்றார்.

“நான் சாரி கேட்டும் அவர் மனது என்னை மன்னிக்க வில்லை” என்று பின்வரும் வகுப்புகளில், என்னையே அவர் டார்ச்சர் செய்தபோது தெரிந்தது.

ஒரு நாள் மதிய உணவு இடைவேளை முடிந்து, முதல் பீரியட் ஷேக்ஸ்பியர் "டெம்பஸ்ட் "பாடம் ரிவிஷன்.

அன்று வீட்டில் ஏதோ விசேஷ சாப்பாடு சாப்பிட்டு வந்த மயக்கம். தூங்கி தூங்கி , பக்கத்து சீட்டில் இருக்கும் சுப்பிரமணி தோளில் விழுந்த என்னை அவன் நிமிர்த்தி விட , இதை கவனித்த வாத்தியார், என்னை எழ சொல்லி கேள்வி கேட்டார்.

"ப்ரோஸ் பரோ யார்? என்று கேட்டதற்கு, மிரண்டாவின் மனைவி என்று தூக்க கலக்கத்தில் சொல்லிவிட வகுப்பு முழுவதும் நக்கல் சிரிப்பு.

உண்மையில் ப்ரோஸ் பேரோ மிரண்டாவின் தந்தை என்று சொல்லியிருக்க வேண்டும். பலமுறை அப்படித்தான் சொல்லி உள்ளேன் .

ஆனாலும் அவர் என்னை "கெட் அவுட்" பிரம் தி கிளாஸ் என்று என்னை விரட்டி விட்டது எனக்கு அவமானமாக போனது.

இப்படி இவர் எடுக்கும் அக்கவுண்டன்சி வகுப்பில் செகரட்டரியல் கோர்ஸ் வகுப்பில், ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து வெளியில்அனுப்புவதோடு மட்டுமல்லாமல், "இவன் எல்லாம் பேசிக் நாலேட்ஜ் இல்லாமல் இருக்கான். எப்படித்தான் பாஸ் பண்ண போகிறானோ?" என்று நக்கல் வேறு .

"பாருங்க உங்களைவிட இந்த நாலு பெண்ணுங்கதான், முதல் நாலு ரேங்க் வாங்க போகுதுன்னு" அடிக்கடி வகுப்பில் சொல்லிகொண்டு இருந்தார்.

ஆண்டு தேர்வு பப்ளிக் எக்ஸாம். ஹால் டிக்கெட் வாங்கிய பிறகு , அவரிடம் வாழ்த்து வாங்க போன போது, அவர் முகத்தை திருப்பிக் கொண்டார் .

அவர் என்னை அவமானப் படுத்திய விதம், எனக்கு ஒரு படிப்பில் ஒரு வெறியையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது.

எல்லா பரீட்சைகளையும் நன்றாகவே எழுதினேன்.

அவருக்கும் அந்த வருட பேட்ச் மாணவர்கள் 56 பேரும் பாஸ்.

நான் ஒருங்கிணைந்த ,கீழ் தஞ்சை மாவட்டதில் முதல் மாணவன். பள்ளியிலும் முதல் மாணவன் என் போட்டோ தாங்கி நின்றது. எல்லா பாடங்களிலும் 80 விழுக்காடு. கணக்கில் 100க்கு 100. 1968 களில் 80 சதவீதம் வாங்குவது மிகவும் சிரமம்.

தன் வாத்தியார் வாழ்க்கையில், முதல் முறையாக எல்லோரும் வகுப்பில் அதுவும் அந்த பள்ளியில் இவர் வகுப்பு மட்டும் "ஆல் பாஸ் " என்றதும், சக ஆசிரியர்கள். தலைமை ஆசிரியர், வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தன் சொந்த செலவில், ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்து, விருந்து தினம் அன்று என்னைக் கூப்பிட்டு அனுப்ப நான்கு முறை ஆள் அனுப்பியும், நான் கலந்துகொள்ள வில்லை.

இதோ 36 வருடங்கள் கழித்து வி.என்.ஆர். என்று அழைக்க படும் ராமமூர்த்தி வகுப்பு வாத்தியார் என் முன்பு .

இப்போது என்னிடம் உதவி கேட்டு அவர்! காலம் யாரையும் சும்மா விடாது?

படித்த வாத்தியார், அதுவும் செகரட்டரியல் கோர்ஸ் வகுப்பில், பேங்கிங் பாடம் எடுத்தவருக்கு நாமினேஷன் பற்றிய விபரம் தெரிந்தும், அக்கவுண்ட் ஓபன் பண்ணும் போது எப்படி கோட்டை விட்டார்?

தவறுதல் இயற்கை தானே! என்று சமாதானம் ஆனேன்.

இதே தவறு தானே அன்று அவர் டெம்பஸ்ட் பாடம் நடத்தும் போது நான் செய்தேன்.

ஆனால், அன்று என்னை எப்படி எல்லோர் முன்னிலையில் அவமானப்படுத்தினார்!

வேட்டிய மடித்து கட்டிய ஒரு குற்றத்துக்கு நான் அனுபவித்த அவமானம் நிறைய .

"சார் நான் போய் பாஸ்கர் சார் என்ன பண்ணிட்டு இருக்கார்ன்னு பாத்துட்டு வரேன்னு " ஆர்டர்லி கோபால் சொன்னதும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினேன்.

"சாரி சார் பேப்பர்ஸ் எல்லாம், டேபிள் டிராயர் அடியில் மாட்டி கொண்டுள்ளது. கவனிக்காமல் விட்டேன் சார்".

பாஸ்கரிடம் அவருடய தவறுக்கு ஒரு வாக்குமூலம் வாங்கி, அவரை அனுப்பிய பிறகு,

எஸ்.பி. கிளைம் அப்ளிகேஷனை செக் செய்தேன்.

டெத் சர்ட்டிபிகேட், வாரிசு சர்ட்டிபிகேட் மற்ற விபரங்கள் சரி பார்க்கப்பட்டது.

ஓரிரு குறைகள் பெரிதாகவே காணப்பட்டது . இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல், இன்னும் ஒரு சில நாட்கள் இவரை தாமதப்படுத்த வேண்டாம் என்று நினைத்து போஸ்ட்மாஸ்டர் லிமிட்டுக்குள், இருப்பு தொகையும், வட்டியும் இருப்பதால் ,உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது .

உடனே சாங்ஷன் ஆர்டர் போட ஏற்பாடு துரிதமாக செயல்பட உத்திரவு இட்டேன்.

நான் சாங்ஷன் மெமோவின் ஒரு காப்பியை அவரிடம் கொடுத்து, இன்னொரு காப்பியை,போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்து , வட்டியுடன் சேர்த்து பெறப்பட்ட தொகைக்கான காசோலையை அவர் கையில் கொடுத்தபோது,

அனிச்சையா அவர் கண்களில் கண்ணீர்.

"36 வருடம் முன்பு நடந்த விஷயத்துக்கு, நான் மன்னிப்பு கேக்கிறேன் வாசு"

"சார் அப்படி சொல்லாதீங்க... நீங்க அப்படி செய்தது ஒரு விதத்தில் எனக்கு நன்மையைதான் செய்தது. இல்லாட்டி போனா நான் ஸ்கூல் பஸ்ட் வர முடியுமா சார்."

அதற்கு நன்றி கடன்தான் என்னுடைய இந்த அலுவலக உதவியோ?

அவரை ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பினேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com