Memes / JOKES


-வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்





-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.

ஜோக்ஸ்!
“நீ எத்தனை மாசமா லவ் பண்றே?”
“பத்து மாசமா!”
“அவளைப் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டே?”
“பணத்தை முழுவதும் காலி பண்ணிடுவா!”

*************************
“என்னோட லவ்வர் எதையும் புதுமையா செய்வார்டி!”
“என்ன செய்தார்?”
“தலையில பூவுக்கு பதிலாக பூச்செண்டையே வைச்சுட்டார்டி!”
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி .
*************************
"இந்தப் பொண்ணு உன் வருங்கால மனைவியா?"
"வருங்கால காதலி!"
*************************
"லவ் பண்றவனுக்கு என்ன ஸ்வீட் கொடுக்கலாம்?"
"எதைக் கொடுத்தாலும் கொடு. அல்வா மட்டும் கொடுத்துடாதே."
*************************
"எங்களுடையது 444 நாள் காதல்."
"பிக்சட் டிபாசிட் காதல்னு சொல்லு."
*************************
"எஸ்.எம்.எஸ்.ல லவ் பண்ணின ஜோடி இப்ப என்ன செய்யுது?"
"வாட்ஸப்ல மேரேஜ் இன்விடேஷனை அனுப்பிட்டு இருக்கு..."
*************************

"கெட்டிமேளம் கெட்டிமேளம்னு ஏன் இவன் குதிக்கிறான்?"
"லவ் லெட்டருக்குப் பதில் வந்துட்டதாம்."
*************************
“நான் உன்னை லவ் பண்றதா வீட்ல சொன்னேன்."
"என்ன ஆச்சு?"
" அந்த அசடை உடனே வரச் சொல்லு பார்க்கணும்னு சொல்லி அவசரப்படறாங்க."
- பர்வதவர்த்தினி, சென்னை
*************************
"ஒரு டாக்டரை லவ் பண்ணது தப்பாப் போச்சுடி."
"ஏன்? என்னாச்சு?"
"என் மனசு பூரா நீதான் இருக்கன்னு சொன்னதற்கு, ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்னு சொல்றாரு!"
- என்.சாந்தினி, மதுரை
*************************
“என்னடா, லவ்வ ப்ரொபோஸ் பண்ணின உடனே, பைக்க ஓரமா நிறுத்திட்டு, இந்தக் கரடு முரடான ரோட்ல நடத்திக் கூட்டிட்டுப் போற. எங்க போறோம்?”
“ஒண்ணுமில்ல, காதலர் பாதை கரடு முரடா, கல்லும் முள்ளுமாதான் இருக்கும்னு காட்டத்தான்.”
*************************
“காதலர் தினத்தன்று நம்ம காதல ஏத்துக்கிறேன்னு சொன்னியே.. இப்ப என்ன இவ்வளவு யோசிக்கிற?”
“இல்ல, இப்பத்தான் என்னோட ஆபீஸ் மேனேஜர்கிட்ட கமிட் ஆயிட்டேன். அத எப்பிடி சொல்றதுன்னு யோசிக்கிறேன்.”
- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை