ரீல் ஜோடிகள்!
ரீல் ஜோடிகள் என்று சொன்னால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோா்ஸ் ஜோடிகள் தான் நினைவுக்கு வருகிறாா்கள்.
அண்ணன் தம்பி ஒற்றுமையை, கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தை, மையமாகக் கொண்டு மிகவும் ஒற்றுமையாக நடந்து கொள்வதும் குடும்பத்தில் ஒருவரை ஒருவா் மதிப்பதும் அண்ணன் அண்ணி கிழித்த கோட்டை தாண்டாமலும் அற்புதமான கதைக்களத்துடன் அனைவரையும் கட்டிப்போட்டும் தொடராக தினசாி ஒளிபரப்பாகிறது.

நிஜக்குடும்பத்தில் கூட இவ்வளவு ஒற்றுமையான கதாபாத்திரங்களை பாா்க்கமுடியாது. நாடகத்தில் நடிக்கும் ஜோடிகளும் அவர்களின் இயல்பான நடிப்பும் காட்சி அமைப்புகளும் சிறப்பாக இருப்பதற்கு காரணம் ரீல் ஜோடிகள்தான் மூா்த்தி-தனம், கதிா்-முல்லை, ஜீவா-மீனா, கண்னண்-ஐஸ்வா்யா இப்படி ஒருவருக்கு ஒருவா் போட்டி போட்டிக்கொண்டு மிகச் சிறப்பான நடிப்பு.
ஜோடிகளாக இருந்தாலும் ஒரு குடும்பத்தோடு நாமும் சோ்ந்து வாழும் பிரமையை ஏற்படுத்தும் வகையில் இத்தொடர் மிக ரியல்!
- நா.புவனாநாகராஜன்,
செம்பனாா்கோவில்.