சூயிங் கம் பற்றி மருத்துவ உலகம் சொல்வதென்ன?

சூயிங் கம் பற்றி மருத்துவ உலகம் சொல்வதென்ன?

சூயிங் கம் - பலர் விரும்பி மெல்வதை  வழக்கமாக கொண்டிருப்பார்கள்.  ஒரு சிலர் அதை தவறான செயல் என கருதுகின்றார்கள். ஆனால்  சூயிங் கம் முதன் முதலாக தாடைகளுக்கு  பயிற்சியளிக்கும் ஒரு பொருளாகவே பயன்படுத்தப்பட்டது. கிரேக்க நாட்டில் மஸ்டிக்  மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங் கமாக மென்றனர். பின்லாந்து நாட்டில் உலகின் மிகவும் தொன்மையான சூயிங்கம் என சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிவம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

சூயிங் கம் மெல்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகளை செய்கிறது என்கிறது இன்றைய மருத்துவ ஆய்வுகள்.

சூயிங்கத்தை உங்கள் வாயால் 10 நிமிடங்கள் மென்று துப்பினால், அது உங்கள் வாயிலுள்ள 100 மில்லியன் பாக்டீரியாக்களை கொன்றுவிடும் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தின் கிரினிசியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

சூயிங் கம் சாப்பிடுவதால், நமது இரத்ததில் இன்சுலின் கலக்கும் விகிதம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஆய்வுகள் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கின்றன. நாம் சூயிங் கம் மெல்லும்போது உருவாகும் புரோட்டின், இன்சுலினை ரத்தத்தில் கலக்க உதவுகிறது என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாகவே நாம் புதிதாக ஒரு வேலையை செய்யப்போகின்றோம் என்றாலோ அல்லது முதல் முறையாக ஒரு நபரை சந்திக்க போகின்றோம் என்றாலோ உளவியல் ரீதியாக ஒரு பதட்டம் இருப்பது இயல்பானதே. இவ்வாறான நேரங்களில் சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் பதட்டத்தை போக்க முடியும்.

சூயிங் கம் சாப்பிடும்போது பதட்டத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்பட்டு  உளவியல் ரிதியாக ஒருவித  ரிலாக்ஸேஷன் கிடைக்கின்றது. இதனால் நாம் எந்த வேலையையும் சுலபமாக செய்து முடிக்க முடியும் என அமெரிக்க ஆய்வு  குறிப்பிடுகின்றது.

சூயிங் கம் சாப்பிவதனால் உடல் எடையையும் குறைக்க முடியும். பசியை கட்டுப்படுத்த கூடிய தன்மை சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் உருவாகின்றது என்கிறார்கள். மதிய உணவுக்கு பின் சூயிங் கம் மெல்வதால் அதிக கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவது குறையும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்கிறார்கள்.

சூயிங்கம் மெல்வது  முக தசைகளுக்கு ஆரோக்கியமான பயிற்சி என்கிறார்கள். மேலும் சூயிங் கம் சாப்பிடுவது முக தசைகளுக்கு ஒரு பயிற்சியாக இருப்பதனால் முகசுருக்கங்களை தவிர்க்கவும் இது உதவியாக  அமையும் என்கிறார்கள்.

சூயிங் கம் மெல்லும்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் குறுகிய கால நினைவாற்றல் பிரச்சனையை  35 சதவீதம் மேம்படுத்தலாம் என்பதை லூசியானா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com