என்று தணியும் இந்த விசில் ஓசை!

கவிதை!
என்று தணியும் இந்த விசில் ஓசை!

ள்ளிப் பருவத்திலே

பாதையோர ரோமியோக்களின்

கிண்டல் ‘விசில்'

பாங்குடனே குடும்பம்

நடத்தும்போதோ!

காலையிலே

பால் குக்கர் 'விசில்'

காபி கலந்து அமரும்

நேரம்

வீதியிலே குப்பை வண்டி

'விசில்'

லுவலகத்திற்கு ஓடோடி

பேருந்து நிறுத்தம்  சென்றால்

நடத்துனரின்

‘டபிள் விசில்'

சின்னத்திரை முன் அமர்ந்தாலோ

திரைப்படப் பாடலிலும்

குத்துப் பாட்டுடன் 'விசில்’

டுநிசியிலோ!

தூக்கத்தைக் கலைக்கும்

தெருக்காவலர் 'விசில்'

‘விசில்' ஓசை இல்லா விண்ணுலகம்

சென்றிடலாம் என எண்ணிய வேளை!

தெருவில் செல்லும் இறுதி ஊர்வலத்திலும்

ஐயகோ! டப்பாங்குத்து ஆட்டத்துடன்

'விசில் ஓசை'.

- அருண்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com