அம்மாவிற்காக

அம்மாவிற்காக
Published on

க்கவாதத்தில் முடங்கிய தனது தாயாருக்கு ரோபோ கை கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் ஐதராபாத்தை சேர்ந்த ஜைன் சம்தானி. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஜைன் சம்தானி சிறு வயதிலிருந்தே ரோபோக்கள் மீது ஈடுபாடு கொண்டவர். ரோபோக்கள் பற்றிய தேடுதல் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அதையே தனக்கான தொழில் வாய்ப்பாக மாற்றிக்கொண்டு விட்டார்.

சம்தானிக்கு 6 வயது ஆனபோது அவரது தாயார் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது கை, கால்கள் செயலிழந்து போயின. அதைப் பார்த்து வேதனை அடைந்த ஜைன் சம்தானி, ‘ரோபோ கை தயாரித்து கொடுக்க வேண்டும்’ என்று முடிவு செய்தார். "நான் உங்களுக்கு ரோபோ கையை உருவாக்கித் தருகிறேன். அதன் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்" என்று அந்த சிறு வயதிலேயே அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பிக்கையூட்டி இருக்கிறார். அதனை வெறும் வார்த்தையாக உதிர்க்காமல், செயல்படுத்தியும் காட்டிவிட்டார்.

இன்று பக்கவாதத்தால் முடங்கிய பலருக்கும் சம்தானியின் ரோபோ கை பக்கபலமாக இருக்கிறது. அவரது கண்டுபிடிப்பை பாராட்டி 2018-ம் ஆண்டு ரியாத்தில் அவருக்கு இளம் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜைன் சம்தானி கூறுகையில், "ரோபோடிக்ஸ் பற்றி கற்றுக் கொள்வது சிரமமான வேலையாக இருந்தது. நான் ஐதராபாத்தில் பிறந்தாலும் சவுதி அரேபியாவில்தான் வளர்ந்தேன். அங்கு ரோபோ குறித்து நிறைய படித்து தெரிந்துகொண்டேன். இது தொடர்பான வீடியோக்களையும் பார்த்தேன். எனது 14 வயதில்தான் முதல் ரோபோவை உருவாக்க தொடங்கினேன். 2013-ம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றேன். ரியாத்தில் உள்ள கிங் சல்மான் அறிவியல் நிறுவனத்தில் ரோபோ பயிற்சியை தொடர்ந்தேன். 2015-ம் ஆண்டு முதல் ஆன்லைனில் படித்தேன். அதன்பிறகு நடந்த ரோபோ போட்டிகளில் முதலிடம் பிடித்தேன்.

வலி நமக்கு வந்தால் அதனை உணரமுடியும். “என் மாமாவும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதற்கு தீர்வு காண வேண்டும்” என்ற உத்வேகம் இன்னும் அதிகரித்தது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் நியூரோபிஸ்டிசிட்டி என்ற அடிப்படையில் ரோபோ சாதனத்தை உருவாக்கினேன். இதில் 2 கையுறைகளை தயாரித்தேன். ஒன்று தொடு உணர்வாகவும், மற்றொன்று ரோபோவாகவும் செயல்படும். 

இந்த இரண்டு கைகளும் மூளையை ஏமாற்றி, பாதிக்கப்பட்டவருக்கு நரம்பியல் இணைப்புகளை உருவாக்குகிறது. இதன் மூலம் முடங்கிய கையை படிப்படியாக மீட்டெடுக்க முடியும். எனது கண்டுபிடிப்பு என் மாமாவுக்கு உதவியது. இந்தக் கண்டுபிடிப்பு கூகுள் அறிவியல் கண்காட்சியில் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. இரண்டு கண்காட்சியிலும் உலக அளவில் நான் இறுதிப் போட்டியாளராக இருந்தேன்.

 அப்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை என் கண்டுபிடிப்பை நேரில் பார்வையிட்டு பாராட்டினார்" என்கிறார் இந்த இளம் சாதனையாளர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com