
“குட்மார்னிங் மேடம்” வந்தவன் கையிலும் பையிலும் ஏகப்பட்ட பேப்பர்கள்.
“ஐ யாம் சிவா” என்று சிரித்தான்.
பாமாவுக்கு அவனைப்பிடிக்கவில்லை.
அவன் பார்வையும், மூஞ்சியும், டிரஸ்ஸூம்... ஒன்றுமே இந்த வேலைக்கு ஷூட்டாகவில்லை.
எரிச்சலாய் வந்தது பாமாவுக்கு.
“வெல்கம்... டேக் யுவர் சீட்”
“தேங்க்யூ” முகத்தில் தன்னம்பிக்கையுடன் உட்கார்ந்தான்.
“இவனை எக்குத்தப்பாய் கேள்வி கேட்டு கழட்டி விடவேண்டியதுதான்” எனமுடி வெடுத்தாள்.
“மிஸ்டர்... இது ஃபைனல் இன்டர்வியூ. ட்ரிம்மா வந்திருக்கலாமே!”
“டிரிம்மா தானே இருக்கேன்”
“திமிரு. ட்ரிம்மா, இல்லையானு மத்தவங்க சொல்லணும்”
“முதல்லே நம்மை நாம நம்பனும் மேடம்” கூலாய் சொல்ல,
பதில் அசர வைத்தது...
“ஓகே. எழுத்து தேர்வில் எத்தனையாவது ரேங்க்?”
“முதல் ரேங்க்”
“ஓஹோ அதான் இவ்வளவு திமிரா?”
“கான்ஃபிடன்ஸுனு சொல்லலாமே!”
“நான் உங்களுக்கு வேலை தரலைனா என்ன செய்வீங்க?”
“சற்று வருத்தப்படுவேன்.”
“இவ்வளவு தூரம் வந்துட்டு போச்சேன்னா”
“இல்லை... ஒரு நல்ல கம்பெனியில் வாய்ப்பு போச்சேன்னு”
“இன்ட்ரஸ்டிங்” நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“உங்களாலே இந்தக் கம்பெனிக்கு எந்த வகையில் வளர்ச்சித்தர முடியும்?”
“அது என்ன டிபார்ட்மென்ட்னு சொல்லுங்க”
“அக்கெளன்ட்ஸ்”
“அப்படின்னா உங்களை முதலில் வீட்டுக்கு அனுப்புவேன்”
“என்ன? “கோபமாய் கேட்க...
“நீங்க இன்டர்வியூ பண்ண சரியா பிரிபேர் பண்ணிட்டு வரலை. கொடுத்த வேலையை சீரியஸ்ஸா எடுத்துக்கலை...”
“ஓஹோ! நான் முதலாளி தெரியுமில்லே?”
“இருந்துட்டு போங்க. இந்த வேலைக்கு நல்ல தகுதியுள்ள ஆளை போடலாமில்லே? இதனால் ஒரு நல்ல தகுதியுள்ள இளைஞனை கம்பெனி இழக்க சான்ஸ் இருக்கு”
“சபாஷ்”
“உங்க வெளிப்படையான அப்ரோச் இன்ட்ரஸ்டிங்”
“தேங்க்யூ”
“இந்த கம்பெனியோட டேர்ன் ஓவர் தெரியுமா?”
“தெரியும். ரொம்ப கம்மி. இப்படியே போனால் ரெண்டு வருடத்தில் திவால் தான்”
“அப்படியா ? பயமாயிருக்கு. எப்படி சொல்றீங்க?”
“உங்க கம்பெனி தகுதிக்கு வருமானம் கம்மி. மூன்று வருடமா கீழே விழுது”
“எப்படித் தெரியும்?”
“இதோ பேப்பர்”
கையிலும் பையிலும் இருந்த பேப்பர்களை வைத்து விளக்க...
“வெரிகுட். இவ்வளவு ப்ரிபரேஷனுக்கு டயமிருந்ததா?”
“இல்லை மேடம், அதான் குளிக்கலை, டிபன்கூட சாப்பிட நேரமில்லை. ராத்திரி பூரா தூங்கலை”
“உங்க டெடிகேஷன் பிரமிக்க வைக்குது. கம்பெனியை நிமிர்த்த என்ன ப்ளான்?”
“ஆறு மாசத்துக்கு 60% சேலரி தரணும். மிச்சம் 40% தீபாளிக்கு முன் போனஸூடன் வட்டியுடன் தரணும். இதனால் கம்பெனிக்கு கைமேலே பணம் குறைந்த வட்டியில் கிடைக்குது.”
“சபாஷ். இது ஊழியர்களை பாதிக்குது. ஒத்துக்கலைனா..”
“விபரமா நான் பேசுவேன். கம்பெனி மூடாம ஓடணும்னு ஆசையிருக்கறவங்க வேலை பாக்கலாம். மத்தவங்க கணக்கை முடிச்சிக்கலாம்.”
“ஆள் குறைப்பா?”
“இல்லை கம்பெனியோட ஒத்துப்போக வேண்டுகோள். நான் ஊழியர்களோட பேசறேன். அப்புறம் ரிஸலட்டை பாத்து வேலை தாங்க.”
“இவ்வளவு நல்ல திறமைசாலியை எனக்கு முதலில் பிடிக்கலை. கழட்டிவிட இருந்தேன். ஸாரி... நீங்க பியூட்டி பார்லருக்கு போயிட்டு வந்தா”
“வந்தா..”
“ரண்பீர் கபூர்னா எனக்கு பிடிக்கும். நீங்க அவர் போல இருப்பீங்க”
“ஸாரி என்னைப்போல அவரிருக்கார்னு சொல்லுங்க” என்று சிரிக்க...
“கான்ஃபிடன்ஸ். ஐ லைக் யூ” என்றாள் தலை கவிழ்ந்து.
“புரியலை”
“என் பேர் தெரியுமா?”
“தெரியாது”
“மிஸ் பாமா” என்று வெட்கி தலை கவிழ...
“இப்பவும் புரியலை முதலாளியம்மா”என்றான் சிவா.
“நீங்க முதலாளியாக சான்ஸிருக்கு... இப்ப புரியும் பாருங்க... என்று ஒரு பொக்கேயை நீட்ட...
சிவா க்ளீன் போல்ட்...