அரிய கலைப்பொருட்களின் அணிவகுப்பு

அரிய கலைப்பொருட்களின் அணிவகுப்பு
Published on

மூலவன்

சிவகாசி மாவட்டம் காயாம்பு நகரில் வசித்து வரும் ராஜராஜன் வீடு அரிய கண்காட்சிகளின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. சங்க காலக் கலைப்பொருட்கள் முதல் மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகப் பொருட்கள் வரை தன் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்து பாதுகாத்துவருகிறார் ராஜராஜன்.

அரிய பொருட்களின் கண்காட்சியை மாவட்டம்தோறும் நூற்றுக்கணக்காக நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காக அரசு விருதும் பெற்றிருக்கிறார். ராஜராஜன் செய்துவரும் கலைப்பொருட்கள் சேகரிப்புப் பணியில் அவரது மனைவி மஞ்சுளாவும் துணையாக இருந்துவருகிறார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் வீட்டில் துலக்கி பளிச்சென்று வைத்திருந்த பூஜைப் பொருட்கள் மற்றும் சாமி சிலை, சாமி சிலைகளுக்கு வைக்கப்படும் முகம் மற்றும் கவசம் பற்றிக் கேட்டோம். அவற்றை ஒவ்வொன்றாக நம்மிடம் விளக்கினார்.

2000 ஆண்டுகள் பழைமையான கலைப்பொருட்கள் இவை. பொங்கல் பிரசாதச் சட்டி, தூபக்கால், நாக விளக்கு, கைவிளக்கு, பஞ்சமுக விளக்கு, சங்ககால மண் விளக்கு, மாவிளக்கு, கும்பா, மரத்தில் செதுக்கப்பட்ட திருமால், கிருஷ்ணர் பரசுராமர், விநாயகர் சிற்பங்களும் பவளக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார், கிருஷ்ணனைச் சுமந்த நிலையில் உள்ள தீர்த்த ஜக்கு, செம்பினால் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்ட பட்டாபிஷேக ராமர், திருமால், லட்சுமி போன்ற சிற்பங்கள் தமிழர்களின் கலைத்திறனை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஒரு இன்ச் அளவே உள்ள வெள்ளியில் செய்யப்பட்ட இந்த கிருஷ்ணர் சிலையில் எவ்வளவு வேலைப்பாடுகள் பார்த்தீர்களா?

அந்தக் காலத்தில் மரத்திலேயே அம்மன் சிலைகள் செய்து தலைக்கு அணிவிக்கும் கவசம் இது. 300 ஆண்டுகள் பழமையானது. பார்வதி சிலைக்கும் அம்மன் நிலைக்கும் பொறுத்தக்கூடிய கவசங்கள் இவை.

இன்னொன்று மரத்திலேயோ மண்ணிலேயோ அம்மன் சிலைகள் செய்து முகத்துக்கு மேலே கிரீடமாக இதை வைப்பார்கள். இதுவும் 300 ஆண்டுகள் பழமையானது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com