0,00 INR

No products in the cart.

“நான் நிரபராதி என்றால், குற்றம் புரிந்தது யார்?”  

ராக்கெட்ரிநம்பி விளைவு சினிமா விமர்சனம்

– லதானந்த்

 

நாட்டையே உலுக்கியது இஸ்ரோவின் ராக்கெட் விஞ்ஞானியான நம்பிநாராயணன் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோக வழக்கு. அதிலிருந்து அவர் விடுதலையானதோடு அவருக்கு மிகப் பெரிய நஷ்டஈடு வழங்கப்பட்டதும், அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டதும் வரலாறு.

இந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து உருவாகியிருக்கும் படம் இது. நிரபராதி ஒருவரைப் பொய்வழக்கு என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லும் படம். மாதவன் நடிப்பில் இயக்கத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆக மிக அற்புதமாக வாழ்ந்திருக்கிறார். மிக இயக்குனராக மாதவனுக்கு இது முதல் படம்.  நம்பவேமுடியவில்லை. பயோ பிக். அதுவும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவரை பற்றி படம் எடுப்பது கம்பி மேல் நடக்கும் வித்தை. மிக அசாதாரணமாக அதை செய்து வெற்றியும் பெறுகிறார்.

ஒரு குத்து பாட்டு இல்லாமல்.. டூயட் இல்லாமல்.. காமெடி இல்லாமல்.. ரத்த களரி இல்லாமல..ஒரு நல்ல தரமான படம் கொடுக்க முடியும் என நிருபித்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

தொலைகாட்சியில் சூரியாவின் நேர்காணல் மூலமாகக் கதை நகர்கிறது.

ஆரம்பத்திலேயே நம்பி நாராயணன் தாக்கப்படுவதையும் அவர் மீதான பொதுமக்களின் ஆவேசத்தையும் காண்பிக்கும்போது, ‘அட… எடுத்த எடுப்பிலேயே படம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதே’ என்று நினைப்பீர்களானால் ஏமாந்துதான் போவீர்கள்.

படத்தில் சொல்லப்படும்  தொழில் நுட்பங்களின் அடிப்படையில் இடைவேளைக்கு முன்பு வரையிலும், ‘ராக்கெட்டை இயக்க திரவ ரூப எரிபொருளைப் பயன்படுத்துவது’ என்றும் இடைவேளைக்குப் பிறகு ‘கிரையோஜெனிக் எஞ்சின்களைப் பயன்படுவது’ என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சமே கொஞ்சம் நம்பி நாராயணன் மீது நடத்தப்படும் விசாரணக் கட்சிகளும், அவருக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அவரது இழப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வசனங்கள் அத்தனை கூர்மை. ‘ஒரு நாயைக் கொல்லணும்ன்னா அதை வெறிநாய்ன்னு சொன்னாப் போதும், ஊரே அடிச்சுக் கொன்னுடும். ஒருத்தன் பெயரைக் கெடுக்கணும்ன்னா அவனை ‘தேசத் துரோகி’ன்னு முத்திரை குத்திட்டாப் போதும். ஒரு நாடே சேர்ந்து அவனைக் கொன்னுடும்!’ ..

இந்தப் படத்தில் பேசப்படும்   வழக்கு பல ஆண்டுகள் நடந்திருக்கிறது. அப்போது இவர் மீது அரசுத் தரப்பில் புனையப்பட்ட ஆதாரங்கள் என்ன? மாலத் தீவுப் பெண்களையும் இவரையும் எந்தப் புள்ளி இணைத்ததாகச் சொல்லப்படுகிறது? இவருடன் சேர்த்து இன்னும் சில விஞ்ஞானிகளையும் ஏன் கைது செய்தார்கள்? இப்படிப் பல கேள்விகளுக்கு விடைகள் சொல்லப்படவேயில்லை. பொய் கேஸ் போட்ட காவல் ஆய்வாளரை, ‘உரிய’ விதத்தில் விசாரித்தால், ஏன் இந்த வழக்கு புனையப்பட்டது என்ற விவரம் வெளிவந்திருக்குமே என்ற சந்தேகமும் எழுகிறது.

இடைவேளைக்கு முன்பு வரைக்கும் மற்றும் இடைவேளைக்குப் பின்னர் கணிசமான நேரம் வரைக்கும், ராக்கெட்டின் தொழில்நுட்பங்களையே மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான டெக்னிகல் சமாசாரங்களைப் பற்றி மிக விரிவாக விஞ்ஞானிகள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் குறைத்திருக்கலாம். இதனால் படம் நகர்புற ரசிகர்களைத் தாண்டிச் செல்வது கடினம்.

படத்தின் கடைசியில் உண்மையான நம்பிநாராயணன்  திரையில் தோன்றி பேசும்  ஒரு வசனம் : “நான் நிரபராதி என்றால், குற்றம் புரிந்தது யார்?”  அது நம் மனத்திலும் எழும் கேள்வி.

மொத்தத்தில் ராகெட்ரி நம்பி நாராயணன் விளைவு = முற்பாதி புரியாத ராக்கெட் தொழிநுட்பம்; பிற்பாதி விடை தராத வினாக்களின் தொகுப்பு

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...