கள்ளநோட்டு கும்பலை காரில் துரத்தி பிடித்த போலீஸ்: ஆம்பூர் அருகே பரபரப்பு!

கள்ளநோட்டு கும்பலை காரில் துரத்தி பிடித்த போலீஸ்: ஆம்பூர் அருகே பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ், நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற ஊர் வழியாக காரில் சென்றபோது, ஒரு கும்பல் அவரது காரை தடுத்து நிறுத்தி வழிப்பறி செய்துவிட்டு ஓடியது.

இதையடுத்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் அளித்தார். அந்த வழிப்பறி கும்பலைப் பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழிப்பறி கும்பல் சென்னைபெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சொகுசுக் காரில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த காரை போலீசார் துரத்தினர். இந்நிலையில்

கொள்ளையர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. போலீசார், உடனடியாக அநத காரில் இருந்த இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த

காரை போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, ரூ. 25 லட்சம் கண்டெடுக்கப் பட்டது. இதையடுத்து மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஆம்பூர் காவல் நிலைய போலீஸார் கூறியதாவது:

காவல் துறை விசாரணையில், அவர்கள் 3 பேரும் போலீஸார் போல் நடித்து வழிப்பறி செய்வது, கள்ளநோட்டுகளை மாற்றுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் வழிப்பறி நடைபெற்றதாக புகார் அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ஆம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த வழிப்பறி கும்பலை போலீசார் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com