
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதுகுறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது,
கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் தேர்வு நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் 1, 3 மற்றும் 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் செய்முறை தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும்.
-இவ்வாறு அமைச்சர் பொன்முடி தகவல் வெளியிட்டார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19- ம் தேதி நடக்க இருக்கும் செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் 5, 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளது.