கணவர் சிலை திருட்டு: அன்னபூரணி அம்மா அதிர்ச்சி!

கணவர் சிலை திருட்டு: அன்னபூரணி அம்மா அதிர்ச்சி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மதுராந்தகம் அருகே தாதங்குப்பத்தில் அன்னபூரணி அரசு அம்மாவின் கணவர் சிலையை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு தரும் அன்னபூரணி அரசு அம்மா என திடீரென் ஒரு பெண் பிரபலமானார். சமூகவலைதளங்களிலும் வைரலானார். இதையடுத்து இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2013-ம் ஆண்டு 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் பங்குகொண்டதும், இவர் வேறொரு பெண்ணின் கணவருடன் குடித்தனம் நடத்தி வந்ததும் தொடர்பான கிளிப்பிங் வெளியாகி அந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில் மதுராந்தகம் அருகே தாதங்குப்பத்தில் அன்னபூரணி அரசு தன் கணவர் சிலையை அமைத்து பூஜை செய்து வந்ததாகவும், நேற்று திடீரென அந்த சிலை மாயமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. காரில் வந்த மர்ம கும்பல் சிலையை எடுத்துச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com