கனவு காணுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி கிட்டும்!

கனவு காணுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி கிட்டும்!

மு. தமிழரசி, அம்பத்தூர்.

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கனவு காண்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில்தான் கனவுகள் வரும் என்பதால், பெரும்பாலான கனவுகள் நமக்கு நினைவில் கூட இருப்பதில்லை. ஆனால், கனவுகள் பல விஷயங்களை கற்று தருகிறது. யோசிக்கவும் வைக்கிறது. கனவில் நல்லதைக் கண்டால் மகிழும் நாம், கெட்டதைக் கண்டால் பயம் கொள்கிறோம். அந்த கனவை யாரிடமாவது சொல்லி மன நிம்மதி அடைவோம்

''கனவு காணுங்கள். அவை நிச்சயம் நமது எதிர்கால வாழ்வினை செம்மைப்படுத்தும்'' என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நமது நாட்டு இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் தாம் செல்லும் இடம் எல்லாம் தெரிவித்தார்கள். அவர் சொன்னது பகல் கனவல்ல.. வருங்காலம் பற்றிய மனக்கண்ணில் காணூம் முன்னேற்றக் கனவு!

கனவில் அதிகாலை கனவு, பகற் கனவு என ஏற்படுகிறது. இவற்றில் 99% அதிகாலை கண்ட கனவு பலிக்கும் என்று நம்பப்படுகிறது. பகல் கனவு என்பது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. நாம் காணும் கனவு குறித்து நமது முன்னோர்கள் பல்வேறுப்பட்ட குறிப்புகளை நமக்கு சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு கனவிற்கும் ஓர் பலன் இருப்பது போல் பரிகாரமும் இருக்கிறது. (கெட்ட கனவினைக் கண்டால் நடக்காமல் இருப்பதற்கு).

வானம், வானவில் கனவில் வந்தால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும் என்றும், வானத்தில் நட்சத்திரங்கள் வந்தால் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும் என்றும், பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துவதுப் போல் நினைத்தால் நாம் ஆசைப்பட்ட விஷயம் நினைத்த காரியம் நல்ல முறையில் நடக்கும் என்றும், கனவில் நிலாவினைக் கண்டால் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் என்று பலன் சொல்லி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் சுப நிகழ்ச்சி நடப்பது நிச்சயம் என்றும் தெய்வங்கள் கனவில் வந்தால் புதையல் போன்ற அதிர்ஷ்டம் உடனே நடக்கும் என்று கூறியுள்ளனர்.

கனவுகள் குறித்த அறிவியல்பூர்வமான படிப்பும் உள்ளது. இதற்கு ஒனைரோலஜி என்று பெயர். அந்த படிப்பில் கனவுகள் குறித்து காலத்தைப் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிகாலை கண்ட கனவு உடனே பலிப்பதாகும். பகல் கனவு ஒரு மாதத்திலும், இரவு காணும் கனவு மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

பல தலைமுறைகளைப் பார்த்து நன்றாக வாழ்ந்து நல்ல முறையில் மரணமடைந்தவர்கள் நமது கனவில் வந்தால், அவர்கள் ஆசி நமக்கு கிடைத்ததாகவும் அதன் மூலம் நல்ல செய்தி, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கின்றனர்.அதைப் போல அகால மரணம், துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் விரும்ப தகாத நிகழ்ச்சி, சிறிய பிரச்னைகள், உடல்நலன் பாதிப்பு. மேலும் எதிர்பாராத சண்டை, வாக்குவாதம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கனவுகள் என்பது நிஜங்களின் கற்பனைதான் என்றாலும் ஆழ்மனத்தில் ஏற்படும் பாதிப்பே கனவாக நமக்கு வெளிப்படுகிறது. கனவுகள் நினைத்த நேரத்தில் நினைத்தவுடன் வருவதில்லை. சிலர் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்கு கனவின் மூலம் தீர்வு கண்டதாக கூறுகின்றனர்.

கணித மேதை இராமானுஜரும் தனது சிக்கலான கணக்கிற்கு கனவின் மூலம்தான் பெரும்பாலும் விடை கிடைத்ததாக தனது வாழ்க்கை வரலாற்றில் தெரிவித்துள்ளார்.

ஆகவே, கனவு காணுவோம்.. வாழ்வில் செம்மையடைவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com