கறுப்ப கொண்டைக்கடலை

கறுப்ப கொண்டைக்கடலை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

–ஆதிரை வேணுகோபால்.

தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டைக்கடலை –ஒரு கப்

பொடியாக நறுக்கிய மாங்காய்+ தேங்காய் துருவல்– தலா கால் கப்

காய்ந்த மிளகாய் 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை
கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயத்தூள் தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கவும் பின்னர் அத்துடன் வேகவைத்த கடலை, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி கருவேப்பிலை தூவி இறக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com