0,00 INR

No products in the cart.

கதம்பமாலை

கார்த்திகையில் கண் திறக்கும் நரசிம்மர்!
ருடத்தில் 11 தமிழ் மாதங்களில் யோக நிலையில் வீற்றிருக்கும் சோளிங்கர் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்தக் காட்சியைக் காண்பதற்காக கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக, கார்த்திகை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

மும்மூர்த்திகளுக்கும் சொக்கப்பனை!
திருச்சி மாவட்டம், உத்தமர்கோயில் என்ற தலத்தில் சிவன், விஷ்ணு. பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் தேவியருடன் காட்சி அளிக்கின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மும்மூர்த்திகளுக்கும், கோயிலைச் சுற்றி மூன்று இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. அதன் பிறகு, மும்மூர்த்திகளும் ஒன்றாக வீதியுலா வருகின்றனர்.

கெளசிக ஏகாதசி பெருமாள் வழிபாடு!
கார்த்திகை மாத கெளசிக ஏகாதசி நாளன்று திருப்பதி வேங்கடாசலபதி உஷத் காலத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு, சூரியோதயத்துக்குள் உக்ர ஸ்ரீனிவாசராகக் கோயிலுக்கு வருவார்.

விஷக்கடியை குணமாக்கும் பிரம்பு!
ர்நாடக மாநிலம், ஸ்ரீசுப்ரமண்யா என்ற தலத்தில் கார்த்திகை மாதம் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கும் உமா மகேஸ்வரி அம்மனுக்கும் தேர் திருவிழா நடைபெறும். தேரை இழுக்க வளையும் தன்மையுள்ள ஒரு வகைப் பிரம்பு பயன்படுத்தப்படுகிறது. தேர் நிலைக்கு வந்ததும் அந்தப் பிரம்பை துண்டுகளாக்கி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். அதை உடலில் தேய்த்துத் தடவிக்கொண்டால் விஷக்கடி தொல்லைகள் தீரும்.

பஞ்சமியில் பால் அபிஷேகம்!
சென்னை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் கார்த்திகை மாத பஞ்சமியை,
ஸ்ரீ பஞ்சமிஎன்று வழிபட்டு, அஷ்டலட்சுமிகளுக்கும் பால் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

திருக்கார்த்திகையில் திறக்கப்படும் திருக்கதவு!
ன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கிழக்கு வாசல் கதவு திருக்கார்த்திகை அன்று திறக்கப்படுகிறது. அன்றியும் விஜயதசமி, ஆராட்டு நாட்களிலும் இக்கதவு திறக்கப்படுவது விசேஷம்.

ஒய்யாளி சேவை!
சிக்கல் சிங்காரவேலவர் கோயில் வசந்த மண்டபத்தில் கார்த்திகைத் திருநாள் உத்ஸவத்தின்போது, சிங்காரவேலன் தேவியருடன் எழுந்தருள்வார். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை புகழ் பெற்றது.

பத்மாவதி தாயாருக்கு பெருமாள் கொடுக்கும் கார்த்திகை சீர்வரிசை!
திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு திருமலையிலிருந்து பட்டுப் புடைவை, தங்கச் சங்கிலி, மஞ்சள், குங்குமம், பிரசாதங்கள் கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின்போது சீர் வரிசையாக வருகின்றன. இவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, பிறகு தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை சிறப்பு மிக்கது.

மகா தீபத்தன்று மடக்கு தீபாராதனை!
திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கு, ‘மடக்கு தீபாராதனைஎன்று பெயர். இங்கு தினமும் நெல்லிக்கனி பிரசாதமாக வழங்கப்படுவது விசேஷம்.

பெருமாள் கார்த்திகை!
காஞ்சிபுரம், அருள்மிகு தீபப்பிரகாசர் கோயிலில் திருமால் ஜோதி வடிவில் காட்சி தருகிறார். பிரம்மா யாகம் செய்தபோது, மகாவிஷ்ணு ஜோதி வடிவமாக விளங்கியதால் அவருக்கு தீபப்பிரகாசர் (விளக்கொளி பெருமாள்) என்று பெயர் வந்தது. கார்த்திகை திருநாளன்று வைணவர்கள் இந்தக் கோயிலில் தீபங்கள் ஏற்றி பெருமாளைப் பூஜிக்கிறார்கள். இதற்கு, ‘பெருமாள் கார்த்திகை’ என்று பெயர்.

சூரசம்ஹாரம் நடைபெறாத முருக ஸ்தலம்!
சூரசம்ஹாரம் முடிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து தங்கிய இடம் திருத்தணிகை. அதனால், கந்த சஷ்டியின்போது இத்தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக, முருகனுக்கு அன்று புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானை தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி உள்ளனர். இன்று இந்திரனால் வழங்கப்பட்ட சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனம் மட்டுமே முருகனுக்கு சாத்தப்படுகிறது. திருவிழா காலங்களில் இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தனம் பல நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பதாகக் கூறப்படுகிறது.

கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றத் தலம்!
ரோடு மாவட்டம், சென்னிமலையில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த மலை 1320 படிகள் கொண்டது. தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தை இயற்றி இந்தக் கோயிலில்தான் அரங்கேற்றினார். கந்தர் சஷ்டி கவசத்தில், ‘சிரகிரி வேலவன் சீக்கிரம் வருகஎன்று பாடுவது, இந்த சென்னிமலை வேல் முருகனைப் போற்றித்தான். இத்தலத்தில், ‘ஷோடச’ எனப்படும் பதினாறு தீர்த்தங்கள் உள்ளன.

ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்

கார்த்திகை சோம வார வழிபாடு!
கார்த்திகை மாதத்தில் சோமவார விரதமிருந்து. சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மன வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். அதோடு, கணவன், மனைவி ஒற்றுமையும் மேலோங்கும்.

முடவன் முழுக்கில் துலா ஸ்நான புண்ணியம்!
திருக்கார்த்திகை மாதம், 2ஆம் தேதி முடவன் முழுக்கு கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஒரு நாள் கூட காவிரியில் நீராட முடியாதவர்கள், இன்று அவசியம் காவிரியில் நீராட வேண்டும். இதனால் துலா ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை துவாதசி வழிபாடு!
கார்த்திகை மாத துவாதசி நாளில், துளசி தேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து, துளசி மாலை சார்த்தி வழிபட்டு வருவது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர் பெரியோர்.

கே.சக்தி, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...