0,00 INR

No products in the cart.

​கதம்பமாலை

யந்திரத்தில் அருளும் அம்பாள்!

குஜராத்தில் கப்பார் மலையடிவாரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசூரி எனுமிடத்திலுள்ள உள்ளது அம்பாஜி ஆலயம். இது ஒரு சக்தி மையம் என்பதால் இங்கே சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. ஆனால், கருவறைச் சுவரில் உள்ள பிறையில் 51 எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புனிதமான,விஸஸ் ரீ’ சக்தி யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யந்திரம் பொறிக்கப்பட்ட பிறைக்கு அணிகலன்களும், கவசங்களும் அணிவிக்கப்பட்டு, சர்வாலங்காரங்களுடன் அன்னை அம்பாஜியாகவே தரிசனம் அளிக்கும் வகையில் உருவம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டியக் கோல மஹாலஷக்ஷ்மி!

மைசூரிலுள்ள சென்னராயப்பட்டினத்திற்கு அருகில் நூக்கிஹல்லி ஆலயத்தில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எட்டு கைகளுடன் நாட்டியமாடும் கோலத்திலும், ஸ்ரீ சரஸ்வதியும்,
ஸ்ரீ சித்தி வினாயகரும் நர்த்தனமாடும் திருக்கோலங்களிலும் காட்சியளிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாதக் காட்சியாகும்.

நடனமாடும் சரஸ்வதி!

ளபேடு, ஹொய்சாளேஸ்வரர் ஆலயத்தில் பெண்கள் இருபுறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்க, சரஸ்வதி தேவி நடனமாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். இங்கு தேவிக்கு வெண்கொற்றக் குடையும், திருவாசியும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது.

கலைமகளின் அம்சமான ஏரி!

ப்பான் நாட்டிலுள்ள ஒஸாகாவில் 255 அடி உயர சரஸ்வதி கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பிவா ஏரி, க்யோடோவின் சரஸ்வதி கோயில் அருகில்தான் உள்ளது. இந்த ஏரி வீணையின் வடிவில் இருப்பது சுவாரஸ்யமானது. சரஸ்வதி தேவியின் அம்சமாகவும் இந்த ஏரி கருதப்படுகிறது.

ஸ்ரீ பத்ம சக்ரரூபிணி!

ந்தவாசிக்கு அருகில், சௌந்தர்யபுரம் என்ற ஊரில் ஸ்ரீ அம்புஜவல்லி சமேத
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. வேறெங்கும் காண்பதற்கரிய அபூர்வமாக
ஸ்ரீ பத்ம சக்ர ரூபியாய் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் இங்கு அவதரித்துள்ளார். திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தருவது ஸ்ரீ பத்ம சக்ரம். மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஒரு கர்ணிகையும், அதையொட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும்
அஷ்ட லக்ஷ்மிகள் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜவல்லியுடன் சேர்ந்து நவசக்தியாக நம்மைக் காத்தருள்கின்றனர்.

எஸ்.ஸ்ருதி, சென்னை

மாட்டுப்பொங்கல் சிவ தரிசனம்!

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பிராகார நந்தி, அதிகார நந்தி, அஷ்ட நந்தி ஆகியோருக்கு மாட்டுப் பொங்கலன்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், பூஜை நடைபெறும். அப்பொழுது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, பழங்கள், வேர்க்கடலை நைவேத்தியம் செய்யப்படும். அச்சமயம் நந்தி பகவானுக்கு முன்பு
ஸ்ரீ அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார். இன்று சிவபெருமான் தமது வாகனமான நந்தி பகவானுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்குவதாக ஐதீகம்.

பொங்கலில் நந்திகேஸ்வரர் வழிபாடு!

திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில் நந்தி பகவான், ‘படர்ந்த அரசு, உயர்ந்த ரிஷபம்’ என்ற அடைமொழிகளால் போற்றப்படுகிறது. அம்பிகை இங்கு பசு வடிவம் தாங்கி ஈசனை வழிபட்டதன் காரணமாக நந்திகேஸ்வரர் தனிச் சிறப்புப் பெற்றுள்ளார். மாட்டுப் பொங்கலன்று நந்திகேஸ்வரரை வழிபட்டு பலன் பெறுவோம்.

எஸ்.ராஜம் ஸ்ரீரங்கம்

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...