காவல்துறை சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை: செல்போன் பேச்சு ஆதாரத்தால் குற்றவாளிகள் கைது!

காவல்துறை சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை: செல்போன் பேச்சு ஆதாரத்தால் குற்றவாளிகள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று அதிகாலை கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் ஆடு திருட்டு கும்பலை விரட்டிச் சென்றபோது, புடுகொலை செய்யப்பட்டார்.

குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமிக்கப் பட்ட நிலையில், பூமிநாதன் கொல்லப் படுவதற்கு முன்பாக, ஆடு திருட்டு கும்பலில் இருந்த ஒரு சிறுவனின் தாயிடம் 23 நிமிடங்கள் செல்போனில் பேசிய ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், நேற்று அதிகாலையில் கீரனூர் அருகே பள்ளத்துப் பட்டியில் ஆடு திருடிய இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரையும் துரத்தி சென்று ரயில்வே சுரங்கப்பாதை அருகே மடக்கிப் பிடித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தன்னுடன் பணியாற்றும் காவல்துறை சிறப்பு உதவியாளர் சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சேகர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள், பூமிநாதன் கொலையாகிக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பூமிநாதன் குடுமப்த்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று முதல்வர் மு.க்.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் பூமிநாதனைப் படுகொலை செய்த ஆடு திருட்டு குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப் பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் இன்று 2 சிறுவர்கள் உடபட 3 பேரை கைதுசெய்தனர். எஸ் எஸ் பூமிநாதன் இறப்பதற்கு முன்பு, கடைசியாக அந்த 3 பேரில் ஒரு சிறுவனின் தாயாரிடம் 23 நிமிடங்கள் செல்போனில் பேசிய உரையாடலை ஆதாரமாக கொண்டு தற்போது மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com