0,00 INR

No products in the cart.

கேட்டேன்; ரசித்தேன்!

ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்!

மசிவாய’ என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், ‘சிவாயநம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்களால் காணக்கூடியது. ‘சூட்சுமம்’ என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று தெளிவாக உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். ‘சிவாயநம’ என்று மனதிற்குள் சொல்லி தியானித்தால், ஈசன் நம் மனதிலேயே உறைவார்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து

தடை; அதை உடை!

ன்மிக வாழ்க்கையில் தடைகளைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, உங்களால் இயன்றவரை பிறருக்குத் தொண்டு செய்யுங்கள். இதனால் தடைகளும் துன்பங்களும் தங்களை நெருங்காது.

ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கவே ஆவல் கொண்டுள்ளனர். அத்துடன் குறைவாகப் பணி செய்து, அதிகமான பலன் பெற்றிட விரும்புகின்றனர்; குறைவாகக் கொடுத்து, அதிக லாபம் பெற விரும்புகின்றனர். இந்த ஒவ்வொரு விருப்பமும் எதார்த்தத்தைத் தடை செய்து விடும். இடையூறாக, நம் பாதத்தையும் பின்னோக்கி இழுத்துவிடும்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளுரையிலிருந்து

வாழ்க்கை ஒரு போர்!

னக்கென விதிக்கப்பட்ட குடும்பக் கடமைகளை சம்பந்தப்பட்டவகள் பரிபூரணமாகச் செய்ய வேண்டும். கடமைகளுக்கு பயந்து வாழ்க்கையைத் துறந்து ஓடுவது கோழைத்தனம். இந்த உலகத்தின் சிக்கல்களுக்கு நடுவே இருந்தபடி, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, இறைவனை நினைத்தபடி வாழ வேண்டும். வாழ்க்கையின் கடமைகளைச் செய்யாமல் ஓடுகிறவர்கள் ஆன்மிக வாழ்க்கைக்குத் தகுதி அற்றவர்கள். அதனால்தான் பகவான் கிருஷ்ணர் போர்க்களத்திலிருந்து அர்ஜுனனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. வாழ்க்கை ஒரு போர். அது தவிர்க்கப்பட வேண்டியதோ, ஒதுக்கப்பட வேண்டியதோ இல்லை.

மாதா அமிர்தானந்தமயி அருளுரையிலிருந்து

நாராயண வெளிப்பாடு!

ராமாயணத்திலே ஸ்ரீராமபிரான் இரு முறை, தான் கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறார். ஜடாயு மற்றும் சபரி ஆகிய இரு பக்தர்களின் அபரிமிதமான அன்பினால் அவர்களுக்கு, ‘வைகுண்ட பதவி’ அளிப்பதாக உறுதி அளிக்கும்போது தானே நாராயணன் எனத் தெரியப்படுத்தினான்.

இளம்பிறை மணிமாறன் சொற்பெழிவிலிருந்து

தொகுப்பு : கே.பிரபாவதி, மேலக்கிருஷ்ணன்புதூர்

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

கேட்டேன்; ரசித்தேன்!

0
விபூதி தரிக்கும் விதம்! கோயிலில் விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

எளிய பரிகாரமும் ஏற்றமிகு பலன்களும்!

1
​உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு! தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால்...

பத்ராசல திருக்கோலத்தில் ஸ்ரீ கோதண்டராமர்!

- தனுஜா ஜெயராமன் பழங்காலத்தில், ‘ஸ்ரீமாபில க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்பட்ட சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் விஸ்தாரமான இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருவறையில் பிரதான மூலவராகக் காட்சி தருபவர்...

​மன இருள் விலக்கும் கீதை!

0
ஒரு பெரியவர் எப்போதும் தனது வீட்டு வாசலில் அமர்ந்து, பகவத் கீதையை படித்துக்கொண்டே இருந்தார்! இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டு வந்தான்! ஒரு நாள் அவரிடம், “தாத்தா... எப்போதும் இந்தப் புத்தகத்தையே...