0,00 INR

No products in the cart.

கேட்டேன்; ரசித்தேன்!

வர் ஒரு பிரபல வழக்கறிஞர்! நற்பண்புகள் நிறைந்த பெரும் தனவந்தர்! பசி என்று யார் தனது வீடு தேடி வந்தாலும், எதுவும் கேட்காமல் அவர்களது பசியை ஆற்றுவதை ஒரு விரதமாகவே கொண்டிருந்தார். அவருடைய மனைவியும், கணவரின் வழியில் அடி ஒற்றி நடப்பவர். உத்தம தம்பதிகளான இவர்கள் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாகவே வாசம் செய்து வந்தாள்!

ஒரு நாள் அவருடைய, ‘சகலை’ என உறவுமுறை கூறிக்கொண்டு ஒருவர் அவருடைய வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரை வழக்கறிஞருக்குத் தெரியவில்லை. இருந்தாலும், ‘சகலை’ என உறவு முறை சொல்பவரைத் தெரியவில்லை என்றால் தனது மனைவியின் மனம் புண்படும் என்று எண்ணி, வந்தவரை உபதேசித்து, ‘‘சில நாட்கள் தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

வந்தவரோசில நாட்கள் என்பதை மறந்து, பல நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார். உண்பதும் உறங்குவதுமாக இருந்தவர், தனது ஊருக்குத் திரும்பிச் செல்லும் எண்ணத்தையே மறந்துவிட்டவர் போல் இருந்தார்.

இப்படி வேலை வெட்டி இல்லாது சோம்பேறியாக இருக்கும் இவர் யார் என்று எப்படி அறிவது?’ என சிந்தித்தார் வழக்கறிஞர். மெதுவாக மனைவியிடம், ‘‘ஆமா! இவரது இரண்டாவது பெண்ணிற்குத் திருமணம் ஆயிற்றோ?’’ என சுற்றி வளைத்து ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே அவரது மனைவி கன்னத்தில் கையை வைத்தவாறு, ‘‘நானே உங்களிடம் எப்படிக் கேட்பது என்றிருந்தேன்! இவர் உங்களுக்கு என்ன உறவு?’’ என்று கேட்டாளே பார்க்கலாம்!

அப்பொழுதுதான், ‘சகலை’ என்று கூறிக்கொண்டு வந்தவர், தங்களை ஏமாற்றி இங்கேயே தங்கி விட்டார் என்று அவர்களுக்குப் புரிந்தது!

இதுபற்றி அவரிடமே கேட்டு விடலாம் என்று அவரிடம் சென்று, “ஐயா! தாங்கள் எந்த வகையில் எனக்கு சகலை உறவு?” என்று கேட்டார் வழக்கறிஞர்!

அதற்கு அவர், ‘‘ஐயா! தங்களின் மனைவி சாட்சாத் திருமகளின் அவதாரம்! என் மனைவியோ, திருமகளின் அக்காவின் அவதாரம்! அதாவது வறுமையின் அவதாரம்! அந்த வகையில்தான் நான் உங்கள் சகலை என்று கூறினேன்’’ என்றார்.

அவருடைய சாதுர்யமான இந்த பதிலைக் கேட்டு அந்த தனவந்தர் வியந்தார்! ஆனாலும், அதைப் பெரிதுபடுத்தாது, அவரது ஏழ்மை நிலையைப் போக்க அவருக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து வசதியாக வாழ, வழி செய்துக் கொடுத்தார் அந்த வழக்கறிஞர்! என்னே அவரது பெருந்தன்மை!

சொற்பொழிவு தொகுப்பு : ஜெயலெட்சுமி ராஜாமணி, மதுரை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கேட்டேன்; ரசித்தேன்!

0
- பே.சண்முகம் எது மௌன விரதம்? ஒருவர் மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு நல்ல விரதம்தான். ஆனால், வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமேயானால் அது மௌன விரதம் ஆகாது. அதனால்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
விபூதி தரிக்கும் விதம்! கோயிலில் விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

கேட்டேன்; ரசித்தேன்!

0
ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்! ‘நமசிவாய’ என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், ‘சிவாயநம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்களால் காணக்கூடியது. ‘சூட்சுமம்’ என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று தெளிவாக...

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....