
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க கோரிய வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் எனக் கோரி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக அநத மனு மீதான விசாரணையில் மத்திய அரசு தரப்பில், கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:
கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடம் உள்ளது. ஆனால் அங்கு தமிழ்வழி கல்வி தேவை என உரிமை கோர முடியாது. தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?
–இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.