காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீஸார் பலி: பிரதமர் இரங்கல்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீஸார் பலி: பிரதமர் இரங்கல்!
Published on

ஜம்மு காஷ்மீரில் போலீஸார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் காவல்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவர்கள்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மேலும் 12 காவலர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிர்வாதிகளைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com