0,00 INR

No products in the cart.

கொங்கு மண்டலத்தில் நிலாபிள்ளை வழிபாடு!

– காயத்ரி

தமிழர் பாரம்பரியத்தில் இறை வழிபாடுகளுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாபிள்ளைக்கு சோறு மாற்றுதல் என்னும் கும்மி அடித்தல் நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத் திருவிழாவிள்கு முன்னதாக தொடங்கும் இந்த நிகழ்வில் இரவு நேரத்தில் நிலாவுக்கு வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
அந்தியூர் அருகே உள்ள புதுமாரியம்மன் கோவிலில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிலாச்சோறு கும்மியடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த கும்மியடித்தல் நிகழ்ச்சியில், பங்குபெறும் பெண்கள் அவர்களது வீட்டில் தினந்தோறும் சமைத்த உணவை எடுத்து வந்து,    சாணத்தால் பிள்ளையாருக்கு படைத்து அதைச்சுற்றி பெண்களும் மற்றும் சிறுவர்கள் கும்மியடித்து பாடல் பாடி நிலாவை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து படைத்த உணவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் உண்டு மகிழ்ந்தனர்,
இந்நிலையில்  நான்காவது நாளான இன்று, பச்சரிசி மாவு படைத்து, அப்பகுதியில் உள்ள பெண்கள் கும்மி பாட்டு பாடி இயற்கையோடு ஒன்றிணைந்து நிலாவை வழிபாடு செய்தனர்.
அப்போது கும்மிப்பாட்டை ஒருவர் பாட, கும்மியடித்து  பின் தொடர்ந்து பாடல் பாடிய படி பெண்கள் நிலாவை வழிபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறையை பின்பற்றி  கும்மி பாட்டு பாடி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இறுதி நாளான தைப்பூச தினத்தில், நிலாவுக்கு படைக்கப்பட்ட உணவை குழந்தைகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் கொடுத்து மகிழ்ந்து, பிடித்து வைத்த பிள்ளையாரை கும்மி பாட்டு பாடிக்கொண்டே நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.
மேலும் இது குறித்து அந்த பெண்களிடம் கேட்டோம்.
” கொங்கு மண்டவத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த  விழா காரணமாக , விவசாயம் செழிக்கும் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு.  மேலும் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து இருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த விழா இருக்கிறது” என்றனர்.
அதே போல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் கும்மியடித்து நிலா பிள்ளையாரை வணங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆண்களும் பெண்களும் கும்மியடித்து தைப்பூசத்தை வரவேற்றனர்:
“நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் தைப்பூசத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வீடுகளில் உள்ள உணவு வகைகளை ஒரே இடத்தில் வைத்து கும்மியடித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மூன்றாவது நாளான தைப்பூசத்திற்கு முதல் நாள் பிள்ளையாரை வணங்கி இரவு முழுவதும் கும்மியடித்து அதிகாலையில் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது கொங்கு மண்டல வழக்கம். கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலா பிள்ளையார் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் ஊர் பொதுவாக அன்னதானம் வழங்கப்பட்டு ஆண்களும் பெண்களும் கும்மியடித்து பிள்ளையாரை வணங்கி தைப்பூசத்தை வரவேற்கிறோம்.” என்றார்,  நிலா பிள்ளையார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவிகா .
 கல்லூரி மாணவி தாருண்யா கூறும்போது ” இளைய தலைமுறைகளுக்கு கும்மி பாட்டு தெரியப் படுத்தும் நோக்கில் நிலா பிள்ளையார் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள் இதனால் இளைய தலைமுறை பெண்கள் கும்மிப்பாட்டு தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது”  என்று கூறினார்
பொதுவாக மார்கழி மாதம் பணி காலம் அந்த காலம் முடிந்து தை மாதம் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு கைகளை தட்டி கும்மி அடிக்கும் போது கைகளில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு தைமாத வெப்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உடல் மாற்றமடையும் என்பது அறிவியல் காரணமாக கூறப்படுகிறது பொதுவாக  தைப்பொங்கல் சூரியனை வழிபடும் நிகழ்வாகவும் நிலா பிள்ளையார் சந்திரனை வழிபடும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பெல்காம் யாருக்கு? சந்தன மாநில​ம் vs சிவாஜி மாநிலம்!

0
-ஜி.எஸ்.எஸ். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் மேடை ஒன்றில்  ‘இது மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம்.  இதை நாம் கொண்டாடுகிறோம்.  ஆனால் மராத்தி மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் சில பகுதிகள்  நம்...

கிராஃபிக் காட்சியை உண்மை என நம்பும் கிரண் பேடி!

0
ஹாலிவுட் திரைப்பட கிராபிக் காட்சியை உண்மை என்று நம்பி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தன் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற...

பயணிகள் கவனிக்கவும்: வித்தார்த் நேர்காணல்!

0
பேட்டி: ராகவ் குமார். தமிழ் சினிமாவில் எப்போதாவது சில படங்கள் தந்தாலும் மனதில் நிற்கும் படியான பட ங்களை தந்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார வித்தார்த். இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்பன் என்ற...

‘’பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்’’: நடிகை சமந்தா!

0
-ஜி.எஸ்.எஸ். நடிகை சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்' என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத்...

வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

0
- ஜிக்கன்னு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் வாட்டர் ஆப்பிள் பழ சாகுபடியை தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் செய்து அசத்துகிறார். தர்மபுரியில் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன்...