
வாசகர் ஜோக்ஸ்
ஓவியம் : ரஜினி
"பழைய புத்தகக் கடையில் ஏதேதோ புத்தகங்கள் வாங்கிட்டுப் போறியே யாருக்கு?"
"தலைவரை வரவேற்கும்போது கொடுக்கத்தான். பார்சலுக்கு உள்ளே உள்ள புத்தகத்தைத் தலைவர் பார்க்கவா போறார்?"
– கு.அருணாசலம், தென்காசி
"நோட்டாவை எப்படியாவது ஒழிச்சிடணும்பா…"
"ஏன் தலைவரே அப்படிச் சொல்றீங்க?"
"நோட்டாவுக்குக் கீழே நாம வோட்டு வாங்கியிருக்கிறதைச் சுட்டிக்காட்டி கலாய்க்கிறாங்களேய்யா…"
– வி.ரேவதி, தஞ்சை
அதிகாரி : "டிராபிஃக் போலிஸா இருக்கிற நீங்க ஏன் தினமும் லேட்டா வர்றீங்க?"
போலிஸ்: "வழியில ஒரே
டிராபிஃக் ஜாம் சார்."
– வி.பார்த்தசாரதி,
சென்னை
"குடும்பத்தோடு கிளம்பிட்டீங்களே பொண்ணு பார்க்கவா சார்?"
"பொண்ணு பார்க்கவா, சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிடவான்னு போயிட்டு வந்த பிறகுதான் தெரியும்."
– வி.ரேவதி, தஞ்சை
"தொற்று போயிடுச்சு இன்னிக்கு நீங்க டிஸ்சார்ச் வீட்டுக்குப் போகலாம்."
"வீட்டை வித்துத்தானே பில் கட்டினேன் டாக்டர்… வீட்டுக்கு எங்கே போறது?"
– எம்.இராஜேந்திரன், லால்குடி
"தலைவர் சரியான கரைச்சல் பேர்வழின்னு சொல்றியே எப்படி?"
"எதிர்க்கட்சிகளைக் கரைக்கிறதுல கில்லாடிப்பா அவரு." – வி.ரேவதி, தஞ்சை