குழந்தைகள் செய்யும் தவறுக்கு பெற்றோருக்கும் தண்டனை: சீனாவில் புதிய சட்டம்!

குழந்தைகள் செய்யும் தவறுக்கு பெற்றோருக்கும் தண்டனை: சீனாவில் புதிய சட்டம்!

சீனாவில் குழந்தைகள் தவறு செய்தால் அவர்களின் பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் சிறுவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் சீன அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள்ன் பெற்றோருக்கும் தண்டனை வழங்கும் வகியில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வர சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அநநாட்டு அரசு தெரிவித்திருப்பதாவது:

குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரே பொறுப்பு ஏற்க வேண்டும். அநத வகையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப் பட உள்ளது. மேலும் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அந்தப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கப் படுவார்கள். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளின் பாதுகாவலர்களும் இச்சட்டம் பொருந்தும். பொதுவாக குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதற்காக விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட முன்வடிவு ஆய்வு செய்ய உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனாவில் வாரக்கடைசி நாட்களில் மட்டுமே சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என சீன கல்வித் துறை அமைச்சகம் கட்டுப்பாடு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com