0,00 INR

No products in the cart.

கும்பாபிஷேக மருந்து!

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– ஜி.இந்திராணி, ஸ்ரீரங்கம்

காம்பர சுக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காலி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன் மெழுகு, வெண்ணெய் எனும் எட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது அஷ்டபந்தன மருந்து. கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து கோயில்களிலும் இந்த அஷ்டபந்தன மருந்தைக் கொண்டே மூர்த்திகளின் பிரதிஷ்டை நடக்கும். கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்கே, ‘மருந்து சார்த்துதல்’ என்ற இந்த அஷ்டபந்தனத்தை சாற்றி விக்ரகங்களை உறுதியாக அமர வைப்பதுதான். இன்று, பல ஊர்களிலும் ரெடிமேடாகக் கிடைக்கும் அஷ்டபந்தன மருந்தை வாங்கிவந்து, வெந்நீரில் போட்டு அப்படியே எடுத்து சார்த்தி சுவாமி சிலையை அதன்மேல் அமர வைத்து விடுகிறார்கள். ஒருசில கிராமங்களில் மட்டும்தான் இன்னும் பாரம்பரியமான முறையில் கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தை இடித்துத் தயாரிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பாலக்காடு கிராமம். இந்த கிராமத்தில் கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தை மிகவும் சிரத்தையாகத் தயாரிக்கிறார்கள்.


பாலக்காடு சுற்றுவட்டாரங்களில் அஷ்டபந்தன மருந்தைத் தயாரிப்பதற்கு மட்டுமல்ல; இடிப்பதற்கும் கணக்கு உண்டு. ஒரு அஷ்டபந்தன உருண்டையின் மேல் 2 லட்சம் முறையிலிருந்து 3 லட்சம் முறை வரை அடி விழ வேண்டும் என்ற கணக்கு உண்டு.
அதற்காக ஊரில் உள்ள இளைஞர்கள் டைம்டேபிள் போட்டுக்கொண்டு இரண்டு மூன்று மாதம் மருந்தின் மேல் மாறி மாறி அடிப்பார்கள். சிலசமயம் பக்கத்து ஊர்களிலிருந்தும் பல இளைஞர்கள் குழுவாக வந்து இதற்கு வேலை பார்ப்பார்கள். ஒவ்வொரு நாளும் அடிக்கக்கூடிய அடிகளை கணக்கு வைத்துக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட லட்சம் அடி வரும் வரை இந்த வைபவம் நடக்கும். அடித்து முடித்த பிறகு, ஒவ்வொரு நாளும் டிபன், பலகாரம் என்று ஜமாவாக இருக்கும். ஒருசில பாலக்காட்டு கிராமங்களில் கும்பாபிஷேகப் பணிகளை அவர்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக்கொண்டு வந்து வேலை பார்ப்பார்கள். இது மாதிரியான பல சுவாரசியங்களும், பாரம்பரியமும் கலந்ததுதான் நமது ஹிந்து தர்மம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...