குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை : சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு!

குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை : சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் குப்பைகளை அகற்றாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 15 மண்டலங்களில் தினமும் குப்பைகளை சேகரிப்பதற்காக 14216 காம்பேக்டர் குப்பை தொட்டிகள், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் நேரடியாக திடக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் திடக் கழிவை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குப்பை அகற்றும் வாகனங்கள் இயக்க நேரம் மற்றும் வாகனங்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் இடங்கள் போன்ற விவரங்களை http://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதையடுத்து புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
– இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Kalki Online
kalkionline.com