
இந்த கால குழந்தைகள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. ஒரு நாள் என் கணவர் ஒட்டடை அடிக்க ஆரம்பித்தார். ''தாத்தா.. நானும் ஒட்டடை அடிப்பேன்'' என்று அடம் பிடித்து, வேறொரு கம்பு எடுத்துவந்து தூசி தட்டுவதாக நினைத்து தாத்தா முதுகில் அடித்து ,தன் தலையிலும் அடித்துக் கொண்டு ஒரே அழுகை. அவர்கள் அடிக்கும் லூட்டிகள் ஒரு சுகமான அனுபவம்.
-உஷா பாஸ்கர், குரோம்பேட்.