ஆப்பிள் ஏன் அழுகுது?

ஆப்பிள் ஏன் அழுகுது?

Published on

வட அமெரிக்கா கனடாவில் டொரொண்டோ நகரில் என் மகள் வழி பேத்தி மணிஷிகா,வயது 6, முதல் கிரேட் படித்து வருகிறாள். அவர்கள் பள்ளியில் சாப்பிட தரும் ஆப்பிளை வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவாள்.

வீட்டிலும் ஆப்பிளை சரியாக சாப்பிடாததல், அது வீணாகி விடும் என்பதால் என் மகள்  " ஆப்பிள் அழுகுது பாரு" என்ற பொழுது,

என் பேத்தி "நான் சாப்பிடவில்லைன்னு ஆப்பிள் அழுகிறதா?" என்று புரியாமல் பேசிய "காமடி" சில காலம் எங்கள் வீட்டில் பேசு பொருளாக இருந்தது.

– சுந்தரி காந்தி, பூந்தமல்லி.

logo
Kalki Online
kalkionline.com