ஹோண்டா அமேஸ் வேணும்!

ஹோண்டா அமேஸ் வேணும்!

என் சகோதரியின் ஐந்து வயது பேரன் ஆத்விக் பேச்சில்  படு சுட்டி.  ஒருமுறை ஷாப்பிங் சென்றிருந்தோம். அங்கு  நீண்ட நாட்களுக்குப்பின்  எங்களை சந்தித்த உறவினர் ஒருவர் நலம் விசாரித்துவிட்டு, ஆத்விக்கிடம், "தம்பி, உனக்கு என்ன வேணும், கேள், நான் வாங்கித் தர்றேன்" என்றார். அதற்கு அவன் "எனக்கு  கார் வேணும் " என்றான். உடனே அவர் அருகில் உள்ள பேன்சி ஸ்டோருக்குள் செல்ல முயன்றார். அப்போ ஆத்விக் "அங்கிள், கார் எனக்கு வேண்டாம். எங்க அப்பாவுக்கு ரெட் கலர்ல ஒரு ஹோண்டா அமேஸ் வாங்கி குடுத்துடுங்க" என்றான் படு கூலாக. 'உன்கிட்ட என்ன வேணும்னு கேட்டது என் தப்புத்தான்டா' என்று மைண்ட் வாய்ஸ் கூறுவது போல் அவர் முழிக்க..  நாங்க சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்க.. செம காமெடி.

ஒரு மழை நேரம். சாப்பிட அடம் பிடித்துக்கொண்டிருந்தான்   ஆத்விக். அவன்  அப்பாவிடம், " இந்த டிவி வொர்க்கே ஆகல" என்றான்.  "நீ நல்லா சாப்பிடு, அது நல்லா வொர்க் ஆகும்" என்றார் அப்பா . ஆத்விக் "நான் ஒழுங்கா சாப்டா, டிவி வொர்க் ஆகுமா? உளறாம போப்பா… சு..ம்..மா ரீல்  விட்டுக்கிட்டு"ன்னு அசால்ட்டா சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தான்.

அவன் அப்பாவுக்கு  அமைதியாவதை தவிர வேற வழி!

-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com