சிம்மம் - 27-12-2022

சிம்மம் - 27-12-2022
Published on

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.

மகம்:இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

பூரம்:இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு வாகனம் மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்:இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com