
இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன் மதிப்பை பெறுவீர்கள். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று பிரச்சனைகளில் முடிந்தவரை நீங்களே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அதனால் உங்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் தேர்ந்தெடுத்து இறங்குவதற்கு மிகச் சரியான நாளாகும். சிலருக்கு துஷ்ட சகவாசத்தால் துன்பங்கள் நேரிடலாம்.
ஸ்வாதி:இன்று இரவுப் பயணத்தை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் வாதத்திறமையால் எதுவும் சாதிக்கலாம். மிகவும் அமைதியாக இருந்து காரியத்தை முடித்துக் கொள்வீ்ர்கள். நீங்கள் முக்கியமான நபர் ஒருவரை இன்று சந்தித்து லாபம் பெறுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று நீங்கள் எப்போதுமே வேலையை திட்டமிட்டு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். எதிலும் யாரையும் நம்பி கையெழுத்து போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5