
இன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.
ஸ்வாதி:இன்று பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9