மணமகனுக்கு ஓர் அட்வைஸ்!

வாழ்வியல்!
மணமகனுக்கு ஓர் அட்வைஸ்!

திருமணமாகப் போகும் என் இனிய செல்வனே... அழகான வானவில் வாழ்த்துகள். இல்லறம் நல்லறமாக சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொள் செல்வனே...

ந்த மனைவியுமே, கணவனிடம் விதவிதமான பட்டுப் புடவைகள், தங்க வைர நகைகள், கார் போன்றவற்றை எல்லாம் எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவளின் எதிர்பார்ப்பே கணவன் தன்னிடம் பிரியமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதே! திருமணம் ஆகப்போகும் என் இனிய செல்வனே!

ன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர் பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லற வாழ்க்கை இனிய நாதமாக மாறும். உனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இதோ உனக்காக சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.

ம்மாவிடமும், மனைவியிடமும் ஒரே மாதிரி பாசத்தை காட்டு. அம்மாவும் மனைவியும் இரு கண்கள்.

ங்கு செல்வதாக இருந்தாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்பு.

னைவி தனது உடல்நிலைப் பற்றி கூறும் பொழுது தயவு செய்து காது கொடுத்துக்கேள். அது கத்தியால் கீறிக் கொண்ட சின்ன காயமாக இருந்தால் கூட பரவாயில்லை.

வீட்டில் மற்றவர்கள் முன் மனைவியை மட்டம் தட்டிப் பேசாதே. யாரிடமும் மனைவியைப் பற்றி மரியாதை குறைவாக பேசாதே. இது உங்கள் அன்னியோன்னி யத்தைக் குறைத்துவிடும்.

தினமும் மனைவிக்கு என்று நேரம் ஒதுக்கி அவளிடம் மனம் விட்டுப் பேசு. மொட்டைமாடி இருந்தால் அவளையும் அழைத்துக்கொண்டு தாராளமாக ஒரு 'walk' போய்வா.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை கண்டிப்பாக நீங்கள் இருவர் மட்டும் வெளியில் சென்று வாருங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். மனது இதமாகும்.

னைவி வித்தியாசமாக புதியதாய் ஏதாவது செய்தால் அதை இரசித்துப் பாராட்டு. அவ்வப்பொழுது சின்ன சின்ன கிண்டல்கள், கேலிகள் செய்து விளையாடு. (மனம் உறுத்தாமல்) நண்பர்களை மட்டும்தான் கேலி செய்ய வேண்டுமா என்ன?

னைவியை விட ஒரு கணவனுக்கு சிறந்த தோழி யாராக இருக்க முடியும். சின்ன சின்ன சீண்டல்கள் வாழ்வை ருசீகரமாக்கும்.

னைவியை எப்பொழுதும் அழகாக பெயரிட்டோ, அல்லது செல்லப் பெயரிட்டோ அழைடா செல்லம்.

னைவியின் பிறந்தநாள் அன்று முதன் முதலில் வாழ்த்து சொல். சின்னதாய் க்யூட்டாய் மகிழ்ச்சி அளிக்கிற ஏதாவது பரிசு கொடு. பரிசு வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நெற்றியில் அழகாக முத்தமிட்டு ஹாப்பி பர்த்டே செல்லம் என்று சொல்லு.

ஞாயிறன்று ஓய்வே இல்லாமல் வேலை செய்யும் மனைவியிடம் "வா இரவு டிஃபன் வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிப்பாரேன்... அப்புறம் பாரு உனக்கு நடக்கும் ராஜ உபச்சாரம்.

னைவி புதுப்புடவை, நகை அணிந்து வந்து உன்னிடம் காண்பிக்கும் பொழுது எதுவுமே சொல்லாமல் ம்...ம்..என்று முனகாமல்' வாவ் சூப்பர்' என்று வாய் திறந்து சொல்லு. அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிடம் வேறு வழியே இல்லாமல் முகஸ்துதி செய்கிறாய் அல்லவா?!ஆனால் காலம் முழுவதும் உன்னுடனேயே வரும் உன் துணையை பாராட்டினால் குறைந்தா போய்விடுவாய்? பாராட்டு என் செல்ல(வ)மே.

திடீரென்று உறவினர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் மனைவிக்கு சமையலில் சிறிது உதவி பண்ணு.

னைவி செய்யும் எந்த நல்ல விஷயத்தையும் மனம் திறந்து பாராட்டு. அவ்வப்பொழுது மென்மையாக தொட்டும் பாராட்டலாம். தோளில் தட்டிக் கொடுக்கலாம் .

ல்லாவற்றிற்கும் மேலாக மனைவியின் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுடா செல்லம். அப்புறம் பாரு, மனைவியின் மனதில் நீ எப்படி ஜம்மென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுவாய் என்று!

உங்கள் இல்வாழ்க்கை ஒரு இனிய நாதமாக மாற இந்த அம்மாவின் அன்பு வாழ்த்துகள்.

ஒரு விதை போட்டால் உடனேவா முளைத்துவிடுகிறது? முளைக்கநேரம் காலம் எல்லாம் இருக்கிறதல்லவா!

அது போலத்தான் திருமணம் ஆனவுடன் மனைவி உன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பதும். அவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் நேரம் கொடு. இருவரும் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com