இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 10 நினைவுச் சின்னங்கள்!

monuments
Monuments
Published on

இந்தியா, கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாடு. அதேபோல் இந்தியாவில் ஆழமான மற்றும் வளமான கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிறந்த 10 நினைவு சின்னங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. தாஜ்மஹால், ஆக்ரா

பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம். எல்லா நேரங்களிலும் பளிங்கின் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் விதமாகவும், அழகான தோட்டங்களாலும் சூழப்பட்ட தாஜ்மஹால், இயற்கை எழில் கொஞ்சும் நினைவுச் சின்னமாக உள்ளது

2. பல்லவ காலத்து கோயில்கள், தமிழ்நாடு

பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கொண்ட மகாபலிபுரம் பல்லவ வம்சத்தின் மகிமைகளை எடுத்துக் கூறும் காலத்தால் அழியாத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் நமது மூதாதையரின் கற்பனையை வெளிப்படுத்தும் அழியாத நினைவு சின்னங்களாக திகழ்கின்றன.

3. கஜுராஹோ, மத்தியப்பிரதேசம்

சிற்றின்ப சிற்பங்களுக்கு பெயர் போன காஜூரஹோ, யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக இருப்பதோடு, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் நினைவுச் சின்னமாக உள்ளது.

4. ராணி கி வாவ், குஜராத்

பெண்ணால் கட்டப்பட்டு, தலைகீழான கோவிலின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு சரஸ்வதி நதியின் ஆழமற்ற நீரை வழிபடுவதற்காக கட்டப்பட்ட 27 மீட்டர் ஆழமுள்ள படி கிணறுதான் ராணி கி வாவ். இது கடவுள்கள் , அவற்றின் மலைகள் மற்றும் தேவதைகளின் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நிலத்தடி அதிசயமான நினைவுச் சின்னமாகும்.

5. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா

2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாறைகளில் செதுக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைக்கூடம். பண்டைய இந்தியர்களின் திறமையையும், படைப்பாற்றலையும் எடுத்துக் கூறும் விதமாக இங்குள்ள ஓவியங்களும் சிற்பங்களும் நினைவுச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.

monuments
monuments

6. சோழர் கோயில்கள், தமிழ்நாடு

11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சோழ வம்சத்தால் கட்டப்பட்ட சோழர்கால கோவில்களான தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தராசுரம் ஆகியவை இன்றளவும் சோழர்கால கட்டடக்கலையை உலகிற்கு பறைசாற்றும் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.

7. கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா

குதுப் ஷா ஆட்சி காலத்தில் ஹைதராபாத்தின் மையப்பகுதியில் 87 அரை வட்டக் கோட்டைகள், 8 யானைகளைத் தடுக்கும் வாயில்கள், சில பீரங்கிகள், 4 இழுவைப் பாலங்கள் கொண்ட ஒரு கம்பீரமான அமைப்பு, அரங்குகள், கோயில்கள், மசூதிகள், பத்திரிகைகள் மற்றும் தொழுவங்கள் கொண்ட ஒரு அரச குடியிருப்பு வளாகத்தைக் கொண்டுள்ள தெலுங்கானாவின் கோல்கொண்டா கோட்டை ஒரு சிறந்த பொறியியலுக்கான நினைவுச் சின்னத்தின் எடுத்துக்காட்டாக உள்ளது.

8. ஹுமாயூன் கல்லறை, டெல்லி

முகலாய கட்டடக்கலை பாணியில் ஹுமாயூன் நினைவாக அவரது மனைவி பானு பேகம் அவர்களால் கட்டப்பட்ட முதல் தோட்டக்கல்லறையான ஹூமாயூன்-கல்லறை 'மினிதாஜ்' என்று அழைக்கப்படும் நினைவு சின்னமாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
சுயமாக கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதற்கான 10 படிகள்?
monuments

9. ஃபதேபூர் சிக்ரி, உத்தரப்பிரதேசம்

இந்து பாரசீக மற்றும் முகலாயபாணி கட்டிடக்கலையின் கலவையான ஃபதேபூர் சிக்ரி, 16 ஆம் நூற்றாண்டில் பிரபல முகலாய பேரரசர் அக்பரின் உத்தரவின் பேரில் கட்டப்பட்ட முதல் திட்டமிடப்பட்ட நகரமாக அறியப்படும் நினைவுச் சின்னமாக உள்ளது.

10. ஹம்பி, கர்நாடகா

திராவிட கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட ஹம்பியின் இடிபாடுகள் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை விவரிக்கும் நுட்பமான சிற்பங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி காலத்தில் விஜய நகர பேரரசின் கட்டிடக்கலை சிறப்பை விளக்கும் நுண்ணறிவு நினைவுச் சின்னமாக விளங்குகிறது.

மேற்கூறிய 10 இடங்கள் பண்டைய இந்தியர்களின் திறனை வெளிக்காட்டும் நினைவுச் சின்னமாக இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
உலகின் 10 ஏழ்மையான நாடுகளின் பட்டியல்; இந்தியாவும் பாகிஸ்தானும் எந்த இடத்தில் உள்ளன?
monuments

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com