இந்தியா மலைகள், சமவெளி பிரதேசம், காடுகள், கடல் தீவுகள் என அனைத்தும் உள்ளடக்கியது. இந்தியாவில் சிறப்புமிக்க தீவுகள் என்று புகழ் பெற்ற 5 தீவுகள் உள்ளன. நதியின் நடுவே, கடலின் நடுவே உள்ள இந்தத் தீவுகள் அதன் அழகிய இயற்கை சூழல், தனித்துவமான புவியியல் அமைப்பாலும் சிறப்பு பெற்று விளங்குகின்றன. அந்த 5 தீவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பாம்பன் பாலத்தோடு ராமேஸ்வரத்தின் கடைக்கோடியில் உள்ளது இந்தத் தீவு. இந்திய பிரதான நிலப்பரப்பின் தெற்கு மூளையாக இது விளங்குகிறது. இத்தீவில் தெளிந்த நீரில் கடற்பாசிகளைக் காணலாம்.
வட கேரளாவில் உள்ள காயல் தீவுகளின் மிகப்பெரிய தொகுப்பு கவ்வாய் தீவுகள் ஆகும். இது கவ்வாய் காயல் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் பரவியுள்ளது. இது ஏராளமான இயற்கை அழகு மற்றும் படிக தெளிவான நீர் நிரம்பிய ஒரு அழகிய தீவாகும்.
நேத்ராணி தீவுகள், பெரும்பாலும் புறா தீவு என்று அழைக்கப்படுகின்றன. இது முருதேஷ்வரா கடற்கரையில் அமைந்துள்ளது. அடர்த்தியான மரங்கள் மற்றும் வளைந்த பாறைகள் நிறைந்த ஒரு அழகான தீவு இது. ஏராளமான புறாக்களுக்கு தங்குமிடம் அளிக்கிறது. இத்தீவின் பவளப்பாறைகள் மற்றும் தெளிவான கடல்கள் இந்தியாவின் சிறந்த டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் இடங்களில் ஒன்றாகும்.
கோவாவின் பன்ஜிமிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மண்டோவி ஆற்றின் மீது திவார் தீவு அமைந்துள்ளது. இது இயற்கையின் சிறப்பிற்கு மத்தியில் அடர்ந்த காடுகளில் புதைந்திருக்கும் சொர்க்கமாகும். இது அமைதி மற்றும் கலப்படமற்ற அழகு நிறைந்த இடம். இந்த தீவு சுவாரஸ்யமான மக்கள் மற்றும் கலாசாரங்களின் தாயகமாகும்.
2016ம் ஆண்டில், மஜௌலி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட முதல் தீவு இதுவாகும். இது பிரம்மபுத்திரா நதியின் நடுவே மொத்தம் 2,706 கி.மீ. நீளமும் 580,000 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பும் கொண்டது. இத்தீவுக்கு அருகாமையில் உள்ள மற்ற நகரங்கள் வடக்கு லக்கிம்பூர் மற்றும் தகுவாகனா ஆகும்.